தமிழ் திரையுலகின் முன்னணி ஆக்சன் கதாநாயகர்களில் ஒருவரான ஆக்சன் கிங் அர்ஜுன் கதாநாயகனாக நடித்து, கடந்த 1996ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் செங்கோட்டை. சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரித்த செங்கோட்டை திரைப்படத்தை இயக்குனர் சிவி.சசிகுமார் இயக்கினார்.

தமிழில் வெற்றி பெற்ற செங்கோட்டை திரைப்படம் தொடர்ந்து தெலுங்கில் எர்ரகோட்டா மற்றும் ஹிந்தியில் நீர்ஜா என டப்பிங் செய்து ரிலீஸ் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தொடர்ந்து பல திரைப்படங்களில் எழுத்தாளராக பணியாற்றியுள்ள இயக்குனர் சிவி.சசிக்குமார் தொலைக்காட்சி தொடரையும் இயக்கியுள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாபாரதம் மெகா தொடரை இயக்குனர் சிவி.சசிக்குமார் இயக்கினார். பின்னர் சென்னையில் வசித்து வந்த இயக்குனர் சிவி.சசிகுமார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நேற்று காலமானார்.

புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் சிவி.சசிக்குமார் மாரடைப்பு காரணமாக நேற்று (நவம்பர் 14)சென்னை மதுரவாயில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார். அவருக்கு வயது 57. மறைந்த இயக்குனர் சிவி.சசிகுமார் அவர்களுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.