தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து ஃபேவரட் காமெடியனாக வலம் வந்த நடிகர் சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். காமெடியனாக மட்டுமில்லாமல் கதாநாயகனாகவும் நகைச்சுவையை மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் சந்தானம்.

சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டிக்கிலோனா திரைப்படம் சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, அடுத்ததாக ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் நகைச்சுவை ஸ்பை த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஏஜன்ட் சாய் சீனிவச ஆத்ரெயா திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் தயாராகிவருகிறது.

இந்நிலையில் வருகிற நவம்பர் 19-ம் தேதி சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள சபாபதி அடுத்து நகைச்சுவை திரைப்படமாக ரிலீசாகிறது சபாபதி. RK என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குனர் ஸ்ரீநிவாச ராவ் இயக்கத்தில் பிரபல இசையமைப்பாளர் சாம்.C.S. இசையில், பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்துள்ள, சபாபதி படத்திற்கு லியோ ஜான் பால் படத்தொகுப்பு செய்துள்ளார். 

சந்தானத்துடன் இணைந்து ப்ரீத்தி வர்மா, M.S.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே, வம்சி, விஜய் டிவி புகழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள சபாபதி திரைப்படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் புதிய SNEAK PEEK வீடியோ வெளியானது. அந்த SNEAK PEEK வீடியோ இதோ...