தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம்வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா அடுத்ததாக லைகர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.போக்கிரி & பிசினஸ்மேன் என மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் தெலுங்கு மற்றும் ஹிந்தி என இரு மொழிகளில் தயாராகும் லைகர் திரைப்படம் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ரிலீசாகவுள்ளது.

குத்து சண்டை வீரராக விஜய் தேவரகொண்டா நடிக்கும் லைகர் படத்தை நடிகை சார்மி மற்றும் பூரி ஜெகநாத் அவர்களின் பூரி கனெக்ட்ஸ் மற்றும் தர்மா புரோடக்சன்ஸ் இணைந்து தயாரிக்க,யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் வழங்குகிறது. லைகர் திரைப்படத்தின் பாடல்களுக்கு தனிஷ்க் பக்ச்சி இசையமைக்க பிரபல இசையமைப்பாளர் மணிஷர்மா பின்னணி இசை சேர்க்கிறார்.

விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிகை அனன்யா பாண்டே நடித்து வரும் லைகர் படத்தில் ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, லைகர் திரைப்படத்தின் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை சாம்பியனான மைக் டைசன் நடிக்கிறார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டைகர் திரைப்படத்தின் படப்பிடிப்பு  தற்போது அமெரிக்காவில் தொடர்கிறது. இப்படப்பிடிப்பில் விஜய்தேவரகொண்டாவும் மைக் டைசனும் நேருக்கு நேர் மோதும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கபட்டு வருவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் விஜய்தேவரகொண்டாவும் மைக் டைசனும் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புதிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் இதோ…