பொருளாதார மேதை பா.சிதம்பரம் பெட்ரோல் டீசல் விலை குறித்து பேச எந்த ஒரு அதிகாரமும் அருகதையும் கிடையாதவர் என பாஜக  மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.

annamalaiசென்னை கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பத்மஸ்ரீ விருது பெற்ற முன்னாள் இந்திய மகளிர் கூடைப்பந்து குழு தலைவி அனிதா பால்துரை அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்நிலையில் மேடையில் அனிதா பால்துரை பேசிய போது 18 ஆண்டுகள் நாட்டிற்காக விளையாடியும் பேருந்து மற்றும் இரயில் சென்று வருவதாக தெரிவித்ததை தொடர்ந்து அவருக்கு பிடித்த காரை வாங்கிக்கொள்ளுங்கள் என 10 லட்சத்திற்கான காசோலையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வழங்கினார் .

பாராட்டு விழாவை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது:  பாஜக சார்பில் பெட்ரோல் டீசல் விலையை உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தப் படவில்லை எனவும்  மத்திய அரசு விலையை குறைத்தும் கூட தேர்தல் அறிக்கையில் சொன்னதை குறைக்காமல் இருக்கும் திமுக அரசை கண்டித்து தான் பாஜக போராட்டம் நடத்துகிறோம் என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து பொருளாதார மேதை பா.சிதம்பரம் பெட்ரோல் டீசல் விலை குறித்து பேச  எந்த ஒரு அதிகாரமும் அருகதையும் கிடையாதவர் என்று குற்றம்சாட்டியதோடு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வில் இருந்தாலும்,  அரசு வருமானத்தை இழந்தாலும் பொதுமக்கள் நலனுக்காக மத்திய அரசு பெட்ரோல் டீசல் குறைத்துள்ளது என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

மேலும் திமுக தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட 500 திட்டங்களில் 200 திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம் என்பதை வெள்ளை அறிக்கையாக தமிழக முதல்வர் வெளியிட வேண்டும் என்றும்  திமுக ஒரே குடும்பமாக ஒரே கம்பெனி நடந்துகின்றனர் என்றும்  திமுக சொல்வது வேற செய்வது வேறாக உள்ளது.பொருளாதாரம் புரியாமல் ஆட்சி நடத்தி வருகிறது திமுக என்றும் பொருளாதாரத்தில் கடந்த 7 ஆண்டுகளில் சிறந்த ஆட்சியை பாஜக அளித்துள்ளது என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து  மழை வெள்ள பாதிப்பிற்கு முதல்வரை 5000 அளிக்க சொன்னேன். அதற்கு அமைச்சர் அண்ணாமலை முட்டாள் என்று கூறினார் . அடுத்த நாள் புதுவை முதலமைச்சர் நிவாரணம்  அறிவித்தார் என அண்ணாமலை சுட்டிக்காட்டினார். 20 ரூபாய்க்கு குவார்டர் வாங்கி 200 ரூபாய்க்கு விற்பதற்கு ஒரு அரசா என்று கேள்வி எழுப்பிய அண்ணாமலை. கொளத்துரில் மழை நீர் தேக்கம் இல்லை என்றும்  அத்தியாவசிய பொருள் கிடைக்கிறது  என்கின்றனரோ அன்று நான் படகு எடுத்து செல்லவில்லை என அண்ணாமலை தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து  பத்ம ஸ்ரீ அனிதா பால்துரை கூறியதாவது: கடந்த 7 ஆண்டுகளில் தான் விளையாட்டு துறை முன்பை விட மேம்பட்டு வருகிறது என்றும் அதன் விளைவு தான் ஒலிம்பிக்கில் கிடைத்த 7 பதக்கங்கள் என்றும்  தெரிவித்தார்.  பிட் இந்தியா, கஹேலோ இந்தியா மூலம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. நான் 8 ஆண்டுகள் எனக்காக மட்டும் விருதுகாக முயற்சிக்கவில்லை என்னை போன்றோர் அனைவரும் விளையாட்டின் மூலம் வெற்றி பெற்று அனைத்து சலுகைகள் கிடைக்க வேண்டும் என்றுதான் முயற்சித்தேன், மேலும் கிராம புறத்தில் உள்ள விளையாட்டு வீரர்களை கண்டறிந்து அவர்களை தேசிய சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வைப்பதே இலக்கு என அனிதா பால்துரை தெரிவித்தார்.