தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராகவும் ரசிகர்களின் ஃபேவரட் இயக்குனராகவும் திகழும் வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறை சிலம்பரசன் நடித்துள்ள மாநாடு திரைப்படம் வருகிற நவம்பர் 25-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள மாநாடு திரைப்படத்தில், சிலம்பரசனுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி அமரன், கருணாகரன், அரவிந்த் ஆகாஷ், பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா, S.A.சந்திரசேகர் ஆகியோர் நடித்துள்ள மாநாடு படத்தில் மிரட்டலான வில்லனாக S.J.சூர்யா நடித்துள்ளார்.

ரிச்சர்ட்.எம்.நாதன் ஒளிப்பதிவில், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பு செய்துள்ள மாநாடு படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். முன்னதாக வெளிவந்த மாநாடு படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் 2-வது பாடலாக #VoiceOfUnity பாடல் தற்போது வெளியானது. தெருக்குரல் அறிவு வரிகளில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் , சிலம்பரசன் மற்றும் அறிவு இணைந்து பாடியுள்ள அதிரடியான இந்த பாடல் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.