“அழகான பெண்களுக்கும், சினிமா ஸ்டார்களுக்கும் பாஜகவில் உடனே பதவி மற்றும் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படுவதாக” பாஜகவை சேர்ந்த முன்னாள் ஆளுநர் ததகத ராய் மிக கடுமையாக விமர்சித்து உள்ளார்.

பாஜக வின் முக்கிய தலைவராக கடந்த காலங்களில் வலம் வந்த  ததகத ராய், திரிபுரா, மேகாலயா மாநிலங்களின் முன்னாள் ஆளுநராக பதவி வகித்து வந்தார்.

முன்னாள் ஆளுநர் ததகத ராய், மேற்கு வங்க பாஜகவுக்கு கடந்த 2002-2006 ஆம் ஆண்டு வரை தலைமை வகித்து வந்தார். கடந்த 2002 முதல் 2015 வரை தெசிய செயற்குழு உறுப்பினராகவும் அவர் இருந்து வந்தார். 

அதன் தொடர்ச்சியாகவே, அவர் திரிபுரா ஆளுநராக கடந்த 2015-2018 ஆம் ஆண்டு காலக்கட்டத்திலும், மேகாலயா ஆளுநராக கடந்த 2018-2020 ஆம் ஆண்டு காலக்கட்டத்திலும் பணியாற்றி இருக்கிறார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவரது ஆளுநர் பதவிகாலம் முடிந்த பிறகு, பாஜகவில் செயல் பூர்வ உறுப்பினராக தான் போராடி வருவதாகத் தெரிவித்தார். 

அதாவது, கடந்த 2015 ஆம் ஆண்டு திரிபுராவின் ஆளுநர் ஆன பிறகு, உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதயைடுத்து, பாஜகவில் சாதாரண உறுப்பினரை விட செயல் உறுப்பினர் பதவிதான் உயர்வாக உள்ளது. 

குறிப்பாக, பாஜகவில் சாதாரண உறுப்பினராக பாஜகவுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். ஆனால், பாஜகவில் செயல் பூர்வமான உறுப்பினராக வேண்டும் என்றால், படிவம் ஒன்றை பூர்த்தி செய்து, அவற்றுடன் 200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது விதியாக உள்ளது. இப்படி செய்பவர்கள் தான், கட்சிப் பணிகளை செய்ய முடியும்.

ஆனால், இந்த செயல்பூர்வ உறுப்பினர் பதவியில் சேருவதற்காக, ஆளுநர் பதவியில் இருந்து விலகியதும் ததகத ராய், தொடர்ந்து முயன்று வருகிறார். ஆனால், இது வரை அது நடக்கவே இல்லை என்று கூறப்படுகிறது. 

அதற்கு முக்கிய காரணம், இவரை அந்த மாநில பாஜகவினர் யாருமே துளியும் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

முக்கியமாக, அந்த மாநிலத்தைச் சேர்ந்த பி.எல்.சந்தோஷ், கைலாஷ் விஜய் வார்க்யா போன்ற முக்கிய பெரிய அளவிலான பாஜக தலைவர்களே இவரை முற்றிலுமாக புறக்கணிப்பதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, ஆனால், தற்போது அவர் பாஜக வின் ஊழல்வாதிகளை அம்பலப்படுத்துவதை ஒரு சபதம் ஏற்றது போல் பேசியும், செயலாற்றியும் வருகிறார்.

முன்னாள் ஆளுநர் ததகத ராய் தற்போது ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில், “பெரும்பாலும் அழகான பெண்கள், நட்சத்திரங்கள், கட்சிக்கு சம்பந்தமில்லாதவர்களுக்கு உடனடியாக பாஜகவில் உறுப்பினர் பதவி, தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கிறது. 

பாஜக தலைவர்கள், திரிணாமூல் குண்டர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை என் போன்ற வீரர்களுக்கு கொடுப்பதில்லை” என்றும், அவர் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும், “நான் கட்சிக்காக கடந்த 40 ஆண்டு காலம் உழைத்து உள்ளேன் எனக்கு உறுப்பினர் பதவி இல்லையா? என்னை இப்படி இழிவு படுத்தலாமா? ஒரு விசுவாசியாக மிஸ்டு கால் கொடுத்து சாதாரண உறுப்பினராகச் சேர்ந்தேன்” என்று, அவர் புலம்பியிருக்கிறார்.

குறிப்பாக, “தற்போது தன்னை விசில் புளோயர் என்று, அதாவது ஊழலை அம்பலப்படுத்துபவன்” என்று, தன்னைத் தானே அறிவித்துக் கொண்டுள்ளார். 

அதன் படி, “பாஜகவில் உள்ள ஊழல்களை அம்பலப்படுத்துவேன்” என்றும், அவர் சூளுரைத்திருக்கிறார். இதனால், அந்த மாநில பாஜக தலைவர்கள் சற்று கலக்கத்தில் உள்ளனர். இது, பாஜகவின் மூத்த தலைவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.