தமிழ் திரையுலகின் மிகச்சிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவர் C.V.குமார். இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இருக்கும் பல முக்கிய இயக்குனர்களின் முதல் படங்களுக்கான வாய்ப்பை வழங்கிய பெருமை C.V.குமார் அவர்களையே சாரும்.

இயக்குனர் பா .ரஞ்சித்தின் அட்டகத்தி, இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் பீட்சா, இயக்குனர் நலன் குமாரசாமியின் சூதுகவ்வும், இயக்குனர் ராம்குமாரின் முண்டாசுபட்டி, இயக்குனர் ரவிக்குமாரின் இன்று நேற்று நாளை உள்ளிட்ட பல  திரைப்படங்களை தயாரித்துள்ளார். இயக்குனராகவும் மாயவன் மற்றும் கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் ஆகிய திரைப்படங்களை C.V.குமார் இயக்கியுள்ளார்.

அடுத்ததாக தயாரிப்பாளர் C.V.குமாரின், திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெளிவருகிறது ஜாங்கோ திரைப்படம். இயக்குனர் மனோ கார்த்திகேயன் எழுதி இயக்கியுள்ள ஜாங்கோ திரைப்படம் இந்தியாவின் முதல் டைம் லூப் சயின்ஸ்ஃபிக்ஷன் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சதீஷ் குமார் மற்றும் மிருணாளினி ரவி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க அனிதா சம்பத், ஹரிஷ் பெறடி, வேலுபிரபாகரன், கருணாகரன், ரமேஷ் திலக், டானியல் மற்றும் நக்கலைட்ஸ் தனம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்திக்.கே.திலக் ஒளிப்பதிவில் சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ள ஜாங்கோ படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் C.V.குமாரின் திருமுருகன் என்டர்டெயின்மென்ட் மற்றும் சுரேந்திரன் ரவியின் ஜென் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் ஜாங்கோ திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியானது. விறுவிறுப்பான இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அந்த ட்ரெய்லரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.