மக்களின் மனம் கவர்ந்த நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் VJS46 ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன.

மேலும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரியுடன் இணைந்து விடுதலை மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து விக்ரம் இந்திய படங்களில் நடித்து வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸாக விசிட் செய்துள்ளார்.

மோகன்லால் நடிப்பில் இயக்குனர் பிரியதர்ஷன் எழுதி இயக்கியுள்ள பீரியட் திரைப்படமான மரக்கார்-அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தில் குஞ்ஞாலி மரக்கார் IV கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்க, ஆக்சன் கிங் அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சுவாரியர், கீர்த்தி சுரேஷ், முகேஷ், நெடுமுடி வேணு, பிரணவ் மோகன்லால், அசோக் செல்வன், சுஹாசினி, கல்யாணி பிரியதர்ஷன், ஹரிஷ் பெரடி நடிக்க பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆன்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ள மரக்கார்-அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்திற்கு திருநாவுக்கரசின் ஒளிப்பதிவில், ரோனி ராஃபெல் பாடல்களுக்கு இசை அமைக்க ராகுல் ராஜ், அங்கிட் சூரி, லைல் எவன்ஸ் ரோடர் ஆகியோர் இணைந்து பின்னணி இசை சேர்த்துள்ளனர். வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி திரைப்படம் நேரடியாக உலகமெங்கும் திரையரங்குகளில் மரக்கார் ரிலீசாகவுள்ள நிலையில் மரக்கார் படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்திற்கு விஜய்சேதுபதி விசிட் செய்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ட்ரெண்டாகும் அந்த வீடியோ இதோ...