தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் குறிப்பிட்ட 6 மண்டலங்களில் மட்டும் கொரோனா என்னும் கொடிய வைரஸ், அதி வேகமாக பரவி வருவது, சென்னை மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

ஒமைக்ரான் என்னும் கொரோனா வைரஸ் இந்தியாவில் நுழைந்த பிறகு, அதன் தாக்கம் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் எதிரொலித்துக்கொண்டு இருக்கிறது. 

இதனால், இந்தியா முழுவதும் கொரோனா பரவல் வேகம் எடுக்க தொடங்கி உள்ள கடந்த 5 நாட்களாக தினமும் பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

அந்த வகையில், தமிழகத்தின் பிற பகுதிகளைக் காட்டிலும் சென்னையில் அதன் பாதிப்பு சற்று அதிகமாக காணப்பட்டு வருகிறது.

அதுவும், சென்னையில் குறிப்பிட்ட 6 மண்டலங்களில் மட்டுமே கொரோனா தாக்கம் அதிக அளவில் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, சென்னை மக்களை கவலைக்கொள்ள செய்துள்ளது.

அதன்படி, “சென்னையில் ராயபுரம், அண்ணாநகர் உள்ளிட்ட 6 மண்டலங்களில் கொரோனா பரவல் வேகமாக பரவி வருவதாக” கூறப்படுகிறது.

அந்த வகையில் பார்க்கும் போது, “தமிழகத்தை பொறுத்தவரை தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் குறிப்பட்ட 6 மண்டலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே என்பது” புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது. 

அதன்படி, “சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தண்டையார்பேட்டை, ராயபுரம், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய 6 மண்டலங்களில் மட்டும் சுமார் 5 ஆயிரம்  பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவது” தெரியவந்திருக்கிறது.

இப்படியாக, “சென்னையில் ஒட்டு மொத்தமாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையில் 63 சதவீதம் பேர், 6 மண்டலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், கடந்த டிசம்பர் 30 ஆம் தேதியில் இருந்து ஒரு வாரத்தில் மட்டும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து உள்ளதும்” தற்போது தெரியவந்திருக்கிறது.

முக்கியமாக, “தண்டையார்பேட்டை, ராயபுரம் மண்டலங்களில் 5 மடங்காகவும், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய மண்டலங்களில் 4 மடங்காகவும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகவும்” கூறப்படுகிறது.

குறிப்பாக, “எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும்போது, தண்டையார்பேட்டையில் கடந்த 30 ஆம் தேதி வரை 99 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்கள். ஆனால், தற்போது இங்கு 500 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதே நேரத்தில், “சென்னை ராயபுரத்தில் 162 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 700 யை கடந்து உள்ளது. சென்னை அண்ணாநகரில் 80 0க்கும் மேற்பட்டோரும், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு மண்டலங்களில் தலா 900 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்கிற புள்ளி விபரங்களும் தற்போது வெளியாகி உள்ளனர். இதனால், இந்த 6 மண்டலங்களைச் சேர்ந்த பொது மக்கள் சற்று கவலையுடன் உள்ளனர்.