இந்த வாரத்திலிருந்து இந்த தற்காலிக நடைமுறை கடைபிடிக்கப்படும். தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கியதும் இந்த நடைமுறை ரத்து செய்யப்படும்.

corono

பிரான்சில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்கள் நோயாளிகளுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கலாம் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பணியாளர்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில் நிறுவனங்கள் தெரிவித்திருந்த நிலையில், மருத்துவம் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு இந்த சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா கால  கட்டுப்பாடுகளை தளர்த்தி அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து  நோய்தொற்றால் பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்கள் லேசான அறிகுறிகளுடன் இருந்தால் அவர்கள் தொடர்ந்து பணிக்கு செல்லலாம். அவர்கள் தங்களை தானே தனிமைப்படுத்தி கொள்ள தேவையில்லை. மருத்துவமனைகளில் பணியாளர்கள் பற்றாக்குறையை சரிசெய்யும் நோக்கில் இந்த நடவடிக்கையை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது.

மேலும் பிரான்சில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இன்னும் அதிகமாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.இதன்காரணமாக அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் சிகிச்சை பெற மருத்துவமனைகளை நாட வேண்டிய நிலை உருவாகலாம். அப்போது மருத்துவ ஊழியர்கள் தேவையான எண்ணிக்கையில் இருப்பதை உறுதி செய்யும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. இந்த சிறப்பு நடவடிக்கை மருத்துவமனைகள், முதியோர் காப்பகங்கள், மருத்துவர்கள் அலுவலகங்கள் மற்றும் இதர அத்தியாவசிய மருத்துவ சேவை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு பொருந்தும். இது ரிஸ்க் என்ற போதிலும் அவர்களால் பிறருக்கு தொற்று பரவாலம் என்ற ரிஸ்க் இருக்கின்ற போதிலும், அத்தியாவசிய மருத்துவ சேவைகள் தொடர்ந்து நடைபெற வேண்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரான்சில் கொரோனா தனிமைப்படுத்துதல் காலம் தடுப்பூசி செலுத்திக்கொண்டோருக்கு 5 நாட்கள் ஆகும். தடுப்பூசி செலுத்தி கொள்ளாதோருக்கு 7 நாட்கள் ஆகும். புதிய வகை கொரோனா தொற்று தீவிர நோய் பாதிப்பை ஏற்படுத்தாத போதிலும் மிக அதிக எண்ணிகையில் மக்களை தாக்குகிறது. இதன் காரணமாகவே அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ள வருகின்றனர். அப்போது மருத்துவ மற்றும் சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக தேவைப்படுகிறது. 

மேலும் இந்த வாரத்திலிருந்து இந்த தற்காலிக நடைமுறை கடைபிடிக்கப்படும். தொற்று எண்ணிக்கை குறைய தொடங்கியதும் இந்த நடைமுறை ரத்து செய்யப்படும். தற்போதைய கொரோனா அலை முடியும் வரை இந்த புதிய நடைமுறை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.