மலையாள திரை உலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் மோகன்லால் நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக திரைப்படங்கள் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகின்றன. மேலும் முதல்முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள மோகன்லால் பர்ரோஸ் கார்டியன் ஆஃப் ட'காமா'ஸ் ட்ரெஷர் எனும் ஃபேண்டசி அட்வென்சர் திரைப்படத்தை இயக்கி நடிக்கிறார்.

அடுத்ததாக மீண்டும் த்ரிஷ்யம் பட இயக்குனர் ஜீத்து ஜோசப் உடன் இணைந்து ராம் திரைப்படத்தில் நடித்து வரும் மோகன்லால் நடிப்பில் மான்ஸ்டர், அலோன் மற்றும் 12th MAN ஆகிய திரைப்படங்களும் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நடிகர் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் மற்றும் பிரித்திவிராஜ் இணைந்து நடித்துள்ள கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக ரிலீஸாகவுள்ளது ப்ரோ டாடி திரைப்படம்.

பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த லூசிஃபர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணைந்துள்ள ப்ரோ டாடி திரைப்படத்தை பிரித்திவிராஜின் பிரித்திவிராஜ் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆஷிர்வாத் சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ளனர். மீனா, கல்யாணி பிரியதர்ஷன், உன்னி முகுந்தன், முரளி கோபி, கனிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில் தீபத்தை இசையமைத்துள்ள ப்ரோ டாடி திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வருகிற ஜனவரி 26ஆம் தேதி ரிலீசாகிறது. இந்நிலையில் ப்ரோ டாடி திரைப்படத்தின் அசத்தலான டிரைலர் தற்போது வெளியானது. அந்த ட்ரெய்லரை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.