நடிகையும் தயாரிப்பாளருமான ராதிகா சரத்குமார், தனது ட்விட்டர் பக்கத்தினை யாரோ ஹேக் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

raadhika sarathkumar

நடிகை ராதிகா 1978-ம் ஆண்டு வெளியான கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். இவர் ரஜினிகாந்த், கமல், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போதும் படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார் ராதிகா.

நடிகை ராதிகா திரைப்படங்கள் மட்டுமின்றி சீரியல்களிலும் அவ்வப்போது  நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ராதிகா தனது போட்டோக்கள், தனது பேரனுடன் இருக்கும் போட்டோக்கள் என சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வார்.

இந்நிலையில் நடிகையும் தயாரிப்பாளருமான ராதிகா சரத்குமார், தனது ட்விட்டர் பக்கத்தினை யாரோ ஹேக் செய்துவிட்டதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது என்னுடைய டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதில் வெளியாகும் கருத்துக்கள் மற்றும் பதிவுகள் குறித்து கவனமாக இருக்கவும் என தெரிவித்தார்.

மேலும் சரி செய்ய முயற்சி செய்து வருகிறேன் எனவும்  விரைவில் சரி செய்யப்படும். நன்றி என இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். ராதிகாவின் நெருங்கிய தோழியான நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பூ மேற்கண்ட இந்த தகவலை அதிகமாக பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு சேர்த்து வருகிறார்.
குஷ்பூ வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் வணக்கம் நண்பர்களே என்னுடைய நல்ல நண்பர் மிகவும் திறமை வாய்ந்த ராதிகாவின் ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரச்சினையை சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் தற்போது உங்களுடன் தொடர்பில் இல்லாத நிலைமை உருவாகி இருப்பதற்கு அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
விரைவில் திரும்பி வருவேன் என்று உறுதி அளித்துள்ளார். உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி என்று  நடிகை குஷ்பூ அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை ராதிகா கடைசியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது வீட்டில் வைத்த கிறிஸ்துமஸ் மரத்தின் படத்தை தனது ட்விட்டர் பகிர்ந்து கொண்டார். அதன்பின் அவர் ட்விட்டர் ஹேக் செய்யப்பட்டுள்ளது. ராதிகா கடைசியாக தீபக் சுந்தர்ராஜனின் அன்னபெல் சேதுபதி படத்தில் நடித்தார். தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, குருதி ஆட்டம், யானை உள்பட பல படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.