மலேசியா வாழ் தமிழரான முகேன் ராவ் தமிழில் பல சுயாதீன பாடல்களை பாடி பிரபலமடைந்தார். குறிப்பாக விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றியும் பெற்று மக்களின் மனதில் இடம் பிடித்த முகென் ராவ் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 

அடுத்ததாக ஷீரடி  ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், வெப்பம் படத்தின் இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கத்தில் உருவாகும் மதில் மேல் காதல் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.முன்னதாக ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் தயாரிப்பில் வேலன் திரைப்படத்தில் முகேன் ராவ் கதாநாயகனாக அறிமுகமானார். 

இயக்குனர் கவின் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வர வேலன் திரைப்படத்தில் முகென் ராவுக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்க, பிரபு,ஹரீஷ் பரேடி,தம்பி ராமய்யா,சூரி,மரியா வின்சென்ட்,பிரிகிடா,ப்ராங்க் ஸ்டார் ராகுல்,பில்லி முரளி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். 

ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் வேலன் பட 2வது பாடலாக வரும் டிசம்பர் 8ஆம் தேதி ரிலீஸாகவுள்ள முகென் ராவின் ட்ரெண்டிங் பாடலான சத்தியமா சொல்லுரண்டி பாடல் ப்ரோமோ தற்போது வெளியானது. அந்த ப்ரோமோ இதோ...