தமிழ் திரையுலகின் ஆகச்சிறந்த இயக்குனராக விளங்கும் இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்களின் மகனான நடிகர் சாந்தனு பாக்யராஜ் தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகனாக வலம் வருகிறார். முன்னதாக தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சாந்தனு.

மேலும் இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த கசடதபற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சாந்தனு பாக்யராஜ், அடுத்ததாக மதயானை கூட்டம் பட இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் ராவணக் கூட்டம் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 

இதனிடையே வருகிற டிசம்பர் 10ஆம் தேதி சாந்தனு பாக்யராஜ் கதாநாயகனாக நடித்துள்ள முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் நேரடியாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. கதாநாயகியாக அதுல்யா ரவி நடிக்க, இயக்குனர் கே.பாக்கியராஜ், யோகிபாபு, மனோபாலா, மதுமிதா மற்றும் முனீஷ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லிப்ரா புரொடக்ஷன்ஸ் & ஃபர்ஸ்ட் மேன் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கியுள்ள முருங்கைக்காய் சிப்ஸ் படத்திற்கு ரமேஷ் சக்கரவர்த்தி ஒளிப்பதிவில் தரண் குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்திலிருந்து புதிய SNEAK PEEK வீடியோ தற்போது வெளியானது. கலக்கலான முருங்கைக்காய் சிப்ஸ் SNEAK PEEK வீடியோ இதோ...