பிரியங்கா சோப்ராவுக்கும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொள்ள தயாராகி வருவதாக செய்தி வெளியாகி உள்ளது.

priyanka

இந்தி திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா முன்னாள் உலக அழகியாகவும் வலம் வந்தவர். தமிழில் விஜயுடன் இணைந்து தமிழன் என்ற படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.  பாலிவுட்டில் பிரபலமாக இருந்த பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் பக்கம் சென்று அங்கும் வெற்றி கண்டார் .  

நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாடகரான  நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  கடந்த 2018-ம் ஆண்டு பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸின் திருமணம் ஜோத்பூரில் இருக்கும் உமைத் பவன் அரண்மனையில் பிரமாண்டமாக நடந்தது.  இத்திருமணம்  இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்கள். 


இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா திருமணத்திற்கு பிறகு சமூக வலைதள கணக்குகளில் தன் பெயருடன் ஜோனஸ்  பெயரையும்சேர்த்து கொண்டார்.  இந்நிலையில் சமூக வலைதள கணக்குகளில் இருந்து தன் கணவரின் பெயரான ஜோனஸை தற்போது  நீக்கிவிட்டார். இதனை கண்ட  ரசிகர்கள் குழப்பம் அடைத்தனர்.  அது தொடர்பாக எந்தவொரு விளக்கத்தையும் அவர் கொடுக்கவில்லை.

மேலும் பிரியங்காவும், நிக் ஜோனஸும் பிரியப் போகிறார்கள் என்றும் பிரியங்கா சோப்ரா ஏன் திடீரென கணவர் நிக் ஜோனஸ் பெயரை நீக்கினார். இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போகிறார்களா?அதனால்தான் சமூக வலைதள கணக்குகளில் இருந்து தனது கணவர் பெயரான ஜோனஸை நீக்கிவிட்டார் என்றும் சமூக வலைத்தளங்களில் பேச்சாக இருக்கிறது .  இதேபோல் சமந்தா  தன் கணவர் நாக சைதன்யாவை பிரியும் முன்பு சமூக வலைதள கணக்குகளில் இருந்து அகினேனியை நீக்கினார் இதனால்  பிரியங்கா சோப்ராவும் விவாகரத்தை எதிர் நோக்கி செல்கிறாரா என்று சமூகவலைத்தளங்களில்  பேச்சாகியிருக்கிறது .

அதனைத்தொடர்ந்து நடிகை பிரியங்கா சோப்ராவின் அம்மா மது சோப்ராவிடம் இது தொடர்பாக பேட்டி ஒன்றில்  கேட்கப்பட்ட போது இது முற்றிலும் தவறான ஒன்று. தேவையில்லாமல் விவாகரத்து வதந்தியை பரப்ப வேண்டாம் என பிரியங்கா சோப்ராவின் தாயார் தெரிவித்துள்ளார் .