அல்லு அர்ஜுனின் அதிரடியான புஷ்பா பட ட்ரைலர் !
By Aravind Selvam | Galatta | December 06, 2021 21:34 PM IST

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன்.இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் இவர் ஹீரோவாக Ala Vaikunthapuramulo என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் 2020 பொங்கலையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.பட்டி தொட்டி எங்கும் இந்த படம் வசூல் மழை ஈட்டியது.
இதனை அடுத்து அல்லு அர்ஜுன் புஷ்பா,அல்லு அர்ஜுன் 21 படங்களில் நடித்து வருகிரியார்.இவர் நடிக்கும் 21ஆவது படத்தை மிர்ச்சி,பரத் அன்னே நேனு உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய கொரட்டால சிவா இயக்குகிறார்.இந்த படம் 2022 தொடக்கத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுன் ரங்கஸ்தலம் பட இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் தயாராகி வரும் புஷ்பா படத்தில் நடித்து வருகிறார்.ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.ஃபஹத் பாசில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார்.இந்த படத்தின் டீஸர் மற்றும் சில பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்றும்,இந்த படத்தின் முதல் பாகம் வரும் டிசம்பர் 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் வேளையில் படத்தின் அதிரடியான ட்ரைலரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Ajith Kumar's Valimai gets a new BIG release announcement - Breaking! Check out!
17/12/2021 08:15 PM