“உலக மக்களைக் காத்தருள ஆதிபரா சக்தி அன்னபூரணி அம்மா அவதாரம் எடுத்துள்ளதாக” கூறி, செங்கல்பட்டு பகுதியில் ஒட்டப்பட்டு உள்ள போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாக வருகிறது.

தற்போது, “அம்மா” என்ற பெயரில் ஃபேஸ்புக் பக்ககத்தில் புதிதாக ஒரு கணக்கு தொடங்கப்பட்டு, பக்தர்கள் உருகும் அளவுக்கும் உருகிய பக்தர்கள் கொண்டாடும் அளவுக்கும் புதிய புதிய வீடியோக்கள் எல்லாம் பதிவிடப்பட்டு வருகிறது. 

அதாவது, 'ஆதிபராசக்தி அன்னபூரணி அம்மா' என்கிற ஃபேஸ்புக் பக்கத்தில் “தன்னை தானே ஆதிபராசக்தியின் அவதாரம்” எனக் கூறிக் கொண்டு, பக்தி பரவசத்தில் பொது மக்கள் செய்யும் பூஜை வீடியோக்கள் ஏராளமாக அதில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால், இப்படி திடீரென்று தமிழ்நாட்டில் தோன்றி உள்ள இந்த “பெண் சாமியார் யார்?” என்று தேடிச் சென்றால், தமிழ்நாட்டில் உள்ள ஒரு தனியார் நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பாகும் ஒரு பிரபல நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பாகிக்கொண்டிருந்த “சொல்வதெல்லாம் உண்மை” என்ற பிரபலமான நிகழ்ச்சியில் தான், இந்த பெண் சாமியரான அன்னபூரணி காதல் பஞ்சாயத்து வரை வந்திருக்கிறார்.

தற்போது, இந்த பெண் சாமியார் அன்னபூரணி பங்கேற்ற “சொல்வதெல்லாம் உண்மை” வீடியோக்கள் இணையத்தில் பெரிய அளவில் ட்ரெண்டாகிக்கொண்டிருக்கிறது.

இந்த ஆதிபரா சக்தி அன்னபூரணி அம்மாவின் சாமியார் அவதாரம் தொடர்பாக இணையத்தில் தெரிக்க விட்டு வரும் நெட்டிசன்கள், 'நித்தியானந்தாவுக்கு டஃப் கொடுக்கிற அளவுக்கு இருப்பதாகவும்” கிடைத்திருக்கும் கண்டெண்ட்டை வச்சு செய்து வருகிறார்கள்.

அதுவும் அம்மன் கோயில்களில் விழா நாட்களில் அதிகாலை முதலே ஒலிக்கும் எல்லாவிதமான அம்மன் பாடல்களும், இந்த அம்மாவுக்காக எடிட் செய்யப்பட்டிருக்கிறது.

இருக்கு. தாயி மகமாயி வேதபுர காளி.. என ஹைப்பிச்சில் ஒலிக்கிறது பாடல்கள். அம்மன் கோயில்களில் விஷேச நாள்களில் ஒலிக்கும் எல்லா பாடல்களும், பெண் சாமியார் அன்னபூரணி அம்மாவுக்காக எடிட் செய்யப்பட்டு தாருமாறாக அந்த வீடியோக்களில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. இதனை கேட்கும் பக்தர்கள் எல்லாம் “எல்லை மீறிப்போறீங்க” என்றும், “என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..?” என்றும், ஏக வசனங்களை இணையத்தில் தெரிக்க விட்டு வருகிறார்கள் மீம்ஸ் ரசிகர்கள்.

அதாவது, செங்கல்பட்டு மாவட்டம் நேரு நகர் திருப்போரூர் கூட்ரோடு சாலையில் உள்ள வாசுகி திருமண மண்டபத்தில் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி அருள் வாக்கு சொல்ல இருப்பதாக அந்த பகுதி முழுவதும் போஸ்டர்கள் ஓட்டப்பட்டு இருக்கின்றன.

இந்த போஸ்டர்கள் யாவும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. 

இது தொடர்பான செய்திகள் மற்றும் போஸ்டர்கள் போலீசாரின் கவனத்திற்கு சென்ற நிலையில், திருமண மண்டபத்தில் நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என மண்டப உரிமையாளரை போலீசார் எச்சரித்து உள்ளனர்.

அத்துடன், “தடையை மீறி அருள்வாக்கு சொல்ல அந்த பெண்ணை அனுமதித்தால், மண்டபத்தின் உரிமையாளர் மீது முதல் குற்றவாளியாக வழக்கு பதியப்படும்” என்றும், போலீசார் எச்சரித்து உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. 

முக்கிறமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் “அருள்வாக்கு அன்னபூரணி அம்மா” என்று, கூறிக்கொள்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முக்கியமாக, “தன்னை அவதாரம்” என்று அழைத்துக்கொள்ளும், அன்னபூரணி தற்போது தலைமறைவாகிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இது குறித்து விசாரிப்பதற்காக அன்னபூரணிக்கு போன் செய்தால், அவர் உட்பட அந்த பெண் சாமியார் சம்மந்தப்பட்ட பலரும் தற்போது செல்போன்களை அனைத்தும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு விட்டதாகவும் வருகிறது. 

இதன் காரணமாகவே, பெண் சாமியார அன்னபூரணி தற்போது தலைமறைவாகி விட்டதாக இணையத்தில் செய்திகள் உலா வருகின்றன.

அதே நேரத்தில் “அன்னபூரணி பற்றி விசாரித்து வருகிறோம்” என்றும், போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. 

அப்படியாக, தமிழ்நாட்டில் புதிதாக உருவாகியிருக்கும் பெண் சாமியார் அன்னபூரணியால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான செய்திகள், இணையத்தில் பெரும் வைரலாகி வருகின்றன.