இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், அக்ஷய் குமார், சாரா அலி கான் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம்டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் என்னும் இணையதள ஆன்லைன் ஓடிடி செயலியில் வெளியாகியுள்ளது. 

galatta kalyanamஅத்ரங்கி ரே இந்தி படம் ஹாட்ஸ்டாரில் இன்று ரிலீஸாகியிருக்கிறது. படத்தில் தமிழ் பையனாக நடித்து மிரட்டியிருக்கிறார் தனுஷ். ராஞ்சனா படத்திற்கு பிறகு தனுஷ் நடித்த ஹிந்தி படம்.  நடிகர்களை பொறுத்தவரை தனுஷ், அக்ஷய் குமார், சாரா அலி கான் மூவருமே தங்களுக்கான பாத்திரங்களை நிறைவாக செய்துள்ளனர். குறும்புக்கார பையன் அதே நேரம் எமோஷனல் காட்சிகளிலும் நிறையவே ஸ்கோர் செய்துள்ளார் தனுஷ். 

காலத்தின் சூழ்நிலை காரணமாக விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொள்ளும் படத்தின் நாயகன் தனுஷ், நாயகி சாரா அலி கான் ஒருக்கட்டத்தில் ஒருவர் மேல் ஒருவர் காதல் கொள்கின்றனர். ஆனால் இவர்கள் மனதளவில் சேரும் நேரத்தில் குறுக்கே வரும் ஒரு பெரிய பிரச்சனைஅது  என்ன பிரச்சனை? இறுதியாக இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக் கதை. மேலும் பங்கஜ் குமாரின் கலர்ஃபுல்லான ஒளிப்பதிவும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. இப்படத்தின் கதைக்களம் மற்றும் திரைக்கதை சற்று வித்தியாசமாக இருந்தாலும் திரைக்கதையில் ஆங்காங்கே ஏற்படும் தொய்வு தவிர்க்க முடியவில்லை. 

அத்ரங்கி ரே படத்தை தமிழில் டப் செய்து கலாட்டா கல்யாணம் என்கிற பெயரில் வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் டப்பிங் சொதப்பல் காரணமாக என்னதான் டப்பிங்னாலும் ஒரு நியாயம் வேணாமா பார்க்க முடியல கேவலமான டப்பிங் என்று ரசிகர்கள் கொந்தளிக்கிறார்கள். ஒரு பக்கம் கலாட்டா கல்யாணம் டப்பிங் மோசம் என்றால் மறுபக்கம் தமிழ் ராக்கர்ஸ் இப்படத்தை வெளியிட்டு அட்டகாசம். இப்படி ஒரே நாளில் இரண்டு அதிர்ச்சி. இதற்கிடையே தென்னிந்திய சூப்பர் ஸ்டார் தனுஷின் நடிப்பு அபாரம் என்று இந்தி ஊடங்கள் பாராட்டிக் கொண்டுயிருக்கின்றனர். வித்தியாசமான கதை, கலர்ஃபுல் காட்சிகள், மனதை தொடும் இசை இதற்காக  கலாட்டா கல்யாணம் படத்தை ஒருமுறை கண்டிப்பாக பார்க்கலாம்.