போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் கொடுத்த ஷாக்! இந்த வார EVICTION ரிசல்ட் இதோ!
By Anand S | Galatta | December 26, 2021 14:56 PM IST
விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்கில் தாமரை சிறப்பாக விளையாடி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ந்து இந்த வாரத்திற்கான எவிக்சனுக்கான நாமினேஷன் ப்ராசஸில் பிரியங்கா, நிரூப், அக்ஷரா, வருண், சிபி, பாவனி ஆகிய 6 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இதனை அடுத்து இந்த வாரத்திற்கான லக்சரி பட்ஜெட் டாஸ்க்காக ஃபிரீஸ் டாஸ்க் தொடங்கியது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கியமான டாஸ்குகளில் ஒன்றான இந்த டாஸ்கில் போட்டியாளர்களின் உறவினர்களும் நண்பர்களும் வருவது வழக்கம். அந்த வகையில் இந்தமுறையும் ஒவ்வொரு போட்டியாளர்களின் உறவினர்களும் நண்பர்களும் வருகை புரிந்தது நெகிழ்ச்சியையும் கலகலப்பையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த வாரத்திற்கான EVICTION ரிசல்ட் தற்போது வெளியானது. போட்டியாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக இந்த வாரம் இரண்டு பேர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக நேற்றைய நிகழ்ச்சியில் பிரியங்கா காப்பாற்றப்பட்ட நிலையில் இன்று அக்ஷரா மற்றும் வரும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன.