தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகிகளில் ஒருவரான நடிகை லக்ஷ்மி மேனன் இயக்குநர் M.சசிகுமார் கதாநாயகனாக நடித்த சுந்தரபாண்டியன் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

குறிப்பாக இயக்குனர் பிரபுசாலமனின் கும்கி, இயக்குனர் சுசீந்தரனின் பாண்டியநாடு, கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா, கார்த்தி நடித்த கொம்பன், தல அஜித் குமார் நடித்த வேதாளம்  என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ள லக்ஷ்மி மேனன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் புலிகுத்தி பாண்டி.

அடுத்ததாக நடிகை லக்ஷ்மி மேனன் நடித்துள்ள புதிய திரைப்படமான  ஏஜிபி ஸ்கிசோஃபிரினியா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில வாரங்களுக்கு முன் வெளியானது. கே எஸ் ஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியன் எழுதி இயக்கியுள்ள ஏஜிபி ஸ்கிசோஃபிரினியா திரைப்படத்தில் லக்ஷ்மி மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார். 

சந்தோஷ பாண்டி ஒளிப்பதிவில் கே.ஜெய் க்ரிஷ் இசையமைத்திருக்கும் ஏஜிபி ஸ்கிசோஃபிரினியா படத்திற்கு சந்திர குமார் படத்தொகுப்பு செய்துள்ளார். ஸ்கிசோஃபிரினியா எனும் மன சிதைவு நோயை மையப்படுத்தி உருவாகியிருக்கும் லக்ஷ்மி மேனனின் ஏஜிபி ஸ்கிசோஃபிரினியா பட விறுவிறுப்பான டீசர் இதோ...