13 அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், ஆசிரியர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்து உள்ள பெருமாள் கோயிலில் செயல்பட்டு வரும் அரசு உயர் நிலைப் பள்ளியில், ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் பயின்று வரும் 13 மாணவிகளுக்கு அந்த பள்ளியைச் சேர்நத 2 ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்து புகார்கள் எழுந்தன.

அதாவது, கடந்த 7 ஆம் ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் குழந்தை பாதுகாப்பு மையம் சார்பாக, பரமக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருமாள் கோயில் அரசு உயர் நிலைப்பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் 9 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலர், “கணித ஆசிரியரான பரமக்குடி மணி நகரில் வசித்து வரும் ஆல்பர்ட் பலவன் பாபு மற்றும் சமூக அறிவியல் ஆசிரியரான விருதுநகர் மாவட்டம் நரி குடியைச் சேர்ந்த ராமராஜ் ஆகிய இருவரும் வகுப்பறையிலேயே மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்யும் நோக்கத்தோடு இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும், மாணவிகளை பல இடங்களில் தவறான நோக்கத்தோடு தொடுவதாகவும்” மாணவிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், “குழுவுடன் வந்து மேற்படி பள்ளியில் நேரடியாக விரைவில் விசாரணை செய்ததில், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதி செய்யப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, சமூக அறிவியல் ஆசிரியரான ராமராஜனை போலீசார் அதிரடியாக கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அத்துடன், தலைமறைவான கணித ஆசிரியரான ஆல்பர்ட் வல்லவன் பாபுவை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.

இதனிடையே, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்து உள்ள கீழ் கோத்தகிரியில் அரசு பள்ளி ஒன்றில் பள்ளி மாணவிகள் 12 பேருக்கு ஆசிரியர் ஒருவர் கடந்த வாரம் பாலியல் தொந்தரவு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.