“40, 50 வயது உள்ள பெண்கள் பிரதமர் மோடியால் அதிகம் ஈர்க்கபடுகின்றனர்” என்று, மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் திக்விஜய சிங் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இப்போதெல்லாம் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் சர்ச்சைக்குறிய கருத்துக்களை கூறி, பெரும் சர்ச்சையில் சிக்கி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் திக்விஜய சிங்கும், தனது கருத்தால் அவரும் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

அதாவது, மத்தியப் பிரதேச முன்னாள் முதலமச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய சிங், போபாலில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நேற்று பேசினார்.

அப்போது, எப்போதும் போலவே அரசியல் பேசிக்கொண்டிருந்த அவர் திடீரென்று, “40, 50 வயதுடைய பெண்கள், பிரதமர் மோடியால் ஈர்க்கபடுகின்றனர்” என்று, தூபம் போட்டார். 

பின் தொடர்ச்சியாக பேச ஆரம்பித்த அவர், “ஆனால், ஜீன்ஸ் அணிந்து செல்போன் வைத்திருக்கும் பெண்கள் அவரால் அவ்வளவு ஈர்க்கப்படுவதில்லை என்று, பலரும் என்னிடம் கூறினார்கள்” என்றும், பேசினார். 

திக்விஜய சிங் இப்படி பேசியதும், அந்த கூட்டத்தில் சிறுது சிரிப்பலையும், சற்று சலசலப்பும் ஏற்பட்டதாக கூறப்படகிறது.

அத்துடன், “பிரதமர் மோடியுடன் பெண்களை ஒப்பிட்டு பேசிய திக்விஜய சிங்கின் இந்த பேச்சு, பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அதுவும், “பெண்ணை அவமதிக்கும் வகையில்” திக்விஜய சிங் பேசுவது இது முதல் முறையல்ல என்றும், அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. 

இதற்கு முன்பாக, திக்விஜய சிங் தான் சார்ந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி. ஒருவரையும் இப்படியாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அப்போதும் பெரும் சர்ச்சை வெடித்தது.

அதாவது, “கடந்த 2013 ஆம் ஆண்டில் திக்விஜய சிங் அப்போது காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த மீனாட்சி நடராஜன் குறித்து பேசிய என்னவென்றால், “எங்களது கட்சி எம்.பி. மீனாட்சி நடராஜன், ஒரு காந்தியவாதி. அவர் எளிமையான, நேர்மையான தலைவர். 

அவர் தனது தொகுதியில் இடம் விட்டு இடம் சென்று கொண்டே இருக்கிறார். நான் அரசியலில் அனுபவம் உள்ள கொல்லன்” என்று பேசி திக்விஜய சிங், திடீரென்று, “மீனாட்சி ஒரு தொடு பொருள்” என்றும் கூறி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

திக்விஜய சிங்கின் இந்த பேச்சு, அப்போது கடும் எதிர்ப்பை கிளம்பியது. 

இதனையடுத்து தான், மீனாட்சி நடராஜன் சுத்தமான தங்கம் போன்றவர்” என்றும் கூறி, பின்னாளில் அவர் சமாளித்தார்.

இந்த நிலையில் தான், “40, 50 வயதுடைய பெண்கள், பிரதமர் மோடியால் ஈர்க்கபடுகின்றனர் என்றும், ஆனால், ஜீன்ஸ் அணிந்து செல்போன் வைத்திருக்கும் பெண்கள் அவரால் அவ்வளவு ஈர்க்கப்படுவதில்லை என்று, பலரும் என்னிடம் கூறினார்கள்” என்று, மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் திக்விஜய சிங், பேசியுள்ளது மீண்டும் பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.