தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வருபவர்  ஸ்ரீதேவி அசோக்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி சேனல்களிலும் வேலைபார்த்து அசத்திவிட்டார்.வாணி ராணி,கல்யாண பரிசு உள்ளிட்ட சூப்பர்ஹிட் தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கினார்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல தொடர்களில் ஒன்று ராஜா ராணி.

இதன் முதல் சீசனில் முக்கிய வில்லியாக நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்து விட்டார் ஸ்ரீதேவி.இந்த தொடரில் கிடைத்த வரவேற்பை அடுத்து தனக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளத்தை பெற்றார் ஸ்ரீதேவி.2019 ஏப்ரல் மாதம் பிரபல போட்டோக்ராபர் அசோக் என்பவரை ஸ்ரீதேவி மனம் முடித்தார்.

சீரியல்களுக்கு வரும் முன் தனுஷின் புதுக்கோட்டையில் இருந்து சரவணன்,தேவதையை கண்டேன்,கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்திருந்தார்.தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி தொடரிலும்,சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக தொடர்களிலும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.

பெரும்பாலும் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஸ்ரீதேவி தற்போது ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி தொடரில் பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.பல வருடங்களுக்கு பிறகு பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பது ஒரு பெரிய மாற்றமாக உள்ளது என்றும் , ரசிகர்களின் ரசனைக்கு தகுந்தவாறு எந்த கதாபாத்திரத்தில் வேண்டுமானாலும் நடிக்கத்தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.படிப்பு,திருமணம் என்று படங்களை நடிப்பதை விட்டுவிட்டதாகவும் படங்களில் நல்ல வாய்ப்பு கிடைத்தால் நடிக்கத்தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.