உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிய காரணத்தால் பலரும் தங்கள் திருமணம் மற்றும் வீட்டு சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைத்தனர். இந்நிலையில் ஊரடங்கு தற்போது தளர்வுபடுத்தப் பட்டுள்ள நிலையில் பல பிரபலங்களும் வரிசையாக தங்கள் திருமணம் பற்றிய செய்திகளை அறிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் நடிகரும், ஆதித்யா சேனலின் நிகழ்ச்சி தொகுப்பாளருமான கலாட்டா குருவுக்கு நாளை பிப்ரவரி 3-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. திருமண தகவலை அவரே உறுதி செய்து சமூக வலைத்தளங்களில் பதிவும் செய்துள்ளார். 

சென்னையை சேர்ந்த பொறியாளரான இவர் சினிமா மீது கொண்ட ஆர்வம் காரணமாக தனியாக மதராஸி என்ற ஒரு யூடியூப் சேனலை துவங்கினார். அதன் பிறகு அதில் கிடைத்த பிரபலத்தை வைத்து தொலைக்காட்சி தொகுப்பாளராக அறிமுகமானார். பின்பு ஆர்யா நடிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான கஜினிகாந்த் என்ற படத்தில் நடித்திருந்தார். 

தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்த ஆடை எனும் படத்தில் சிறிய ரோலில் நடித்தார். சமீபத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் படத்தில் தளபதி விஜய் கதை சொல்லும் காட்சியில் வந்திருப்பார் குரு. 

இந்நிலையில் கலாட்டா குரு கற்பகம் என்பவரை நாளை  திருமணம்  செய்ய உள்ளார் . மேலும் தனது வரும்கால மனைவியுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் நடிகர் குருமூர்த்திக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது நம் கலாட்டா. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Galatta Guru (@galatta_guru)