பாலியல் உறவுக்கு இணங்க மறுத்த பெண்ணின் குழந்தையைத் தீயில் எரிந்த உச்சக்கட்ட கொடூர சம்பவம் அரங்கேறி, அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

பீகார் மாநிலத்தால் தான், நினைத்துக்கூடப் பார்க்க முடியாத இப்படியான மிக கொடூரமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது. 

பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டம் போசஹான் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 31 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை, ஒரு பெண் தனது 3 மாத கைக்குழந்தையுடன் வீட்டிற்கு வெளியே எரிந்துகொண்டிருக்கும் நெருப்பை பார்த்த வண்ணம் அதன் அருகில் அமர்ந்துகொண்டு, குளிர் காய்ந்துகொண்டு இருந்தார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர், அங்கு வந்து அந்த பெண்ணின் அருகில் அமர்ந்த படியே ஏதோ பேச்சுக்கொடுப்பது போல் பேசிவிட்டு, திடீரென்று அந்தப் பெண்ணிடம் தவறான நடக்க முயன்று உள்ளார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அவரின் ஆசைக்கு இணங்க மறுத்ததுடன், சத்தம் போட்டு உதவிக்கு ஆட்களை அழைத்திருக்கிறார். 

இதனால், கடும் ஆத்திரமடைந்த அந்த நபர், அந்த பெண்ணிடம் மீண்டும் மிரட்டும் தோரணையில், அந்த பெண்ணை பாலியல் இச்சைக்கு இணங்கும் படி, மீண்டும் மீண்டும் மிரட்டிப் பார்த்திருக்கிறார். ஆனால், இதைப் பற்றியெல்லாம் துளியும் கவலைப்படாத அந்த பெண், அந்த நபரை திட்டிக்கொண்டே சத்தம் போட்டு உதவிக்கு ஆட்களை  அழைப்பதிலேயே குறியாக இருந்துள்ளார்.

இதனால், இன்னும் எரிச்சல் அடைந்த அந்த நபர், அந்த பெண்ணின் மடியிலிருந்த 3 மாத பச்சிளம் பெண் குழந்தையைக் கண் இமைக்கும் நேரத்தில் பிடுங்கி, சட்டென்று அருகில் எரிந்துகொண்டிருந்த நெருப்பில் வீசி உள்ளார். 

இதில், அந்த தீயில் விழுந்த குழந்தை, வலியால் அழுது துடித்து உள்ளது. இதனால், இன்னும் பதறிப்போன அந்த தாய், துடிதுடித்து ஓடிச் சென்று, தனது 3 மாத குழந்தையை தீயில் இருந்து உடனடியாக மீட்டுள்ளார்.

ஆனால், அந்த பச்சிளம் குழந்தைக்குப் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து, பலத்த தீ காயமடைந்த குழந்தையை மீட்ட தாய், அக்கம் பக்கத்தினர் உதவியுடன், அங்குள்ள சதார் மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்தனர். அங்கு, அந்த பச்சிளம் குழந்தைக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இது தொடர்பாக அந்த பச்சிளம் குழந்தையின் தந்தை அங்குள்ள உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், அங்குள்ள காவல் நிலைய போலீசார் அதனை ஏற்க மறுத்ததால், அவர் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் இது குறித்து புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், குற்றவாளி மீது, இந்திய சட்ட பிரிவுகள் 307, 354, 323 மற்றும் 341 இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அத்துடன், இது குறித்து போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, பாலியல் உறவுக்கு இணங்க மறுத்த பெண்ணின் குழந்தையைத் தீயில் எரிந்த உச்சக்கட்ட கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. அந்த மாநிலத்தையே கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.