அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் போன்ற நாடுகள் தான் கொரோனா தடுப்பூசிகளை அதிகமாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொரொனா தடுப்பூசி அளித்து விட்டு தடுப்பூசி செலுத்தலை தற்காலிகமாக நிறுத்தம் செய்ய கோரி உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.


ஏழை நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி தேவைப்படுகிறது என்பதால் அவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்ய வேண்டியுள்ளது. அதனால் வளர்ந்த நாடுகளில் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தடுப்பூசி அளித்துவிட்டு, தடுப்பூசி செலுத்தலை இடைநிறுத்தம் செய்ய வேண்டும்.


வளர்ந்த நாடுகள் அவசியம் இதை பின்பற்ற வேண்டும். ஏழை நாடுகள் நோய் தொற்றுக்காலத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதால் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டிய நபர்களுக்கு செலுத்தி விட்ட பிறகு இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.