தமிழ்,தெலுங்கு,கன்னட மொழி படங்களில் நடித்து அசத்தி வந்தவர் ப்ரணிதா.கன்னடத்தில் வெளியான போக்கிரி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் ப்ரணிதா.அருள்நிதியுடன் உதயன் படத்தின் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் ப்ரணிதா.தொடர்ந்து கார்த்தியுடன் இவர் நடித்த சகுனி படம் இவருக்கு பல ரசிகர்களை உருவாக்கியது.

தொடர்ந்து தெலுங்கிலும் Attarintiki Daredi,Rabhasa என்று பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார் ப்ரணிதா.இதனை அடுத்து சூர்யா நடித்த மாஸ் படத்தில் ஒரு ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார் ப்ரணிதா.

அடுத்து மகேஷ் பாபுவுடன் இவர் இணைந்து நடித்த Brahmotsavam திரைப்படம் இவரை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்த்து.தொடர்ந்து இவர் தமிழில் நடித்த எனக்கு வாய்த்த அடிமைகள் மற்றும் ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது போட்டோ மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார் ப்ரணிதா.தற்போது தனது குளியலறை புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் ப்ரணிதா,இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

A post shared by Pranitha Subhash 🧿 (@pranitha.insta)