விஜய் டிவி தமிழ் தொலைக்காட்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு சேனல்.தங்களது வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,தொடர்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர்.இந்த தொலைக்காட்சியில் வேலைபார்த்த பலரும் தற்போது சினிமாவில் பிரபலன்களாக உள்ளனர்.

சிவகார்த்திகேயன்,சந்தானம் போன்ற முக்கிய நடிகர்களை உருவாக்கியது விஜய் டிவி தான்.பல துணை நடிகர்கள்,காமெடி நடிகர்கள்,இயக்குனர்கள் கதாசிரியர்கள் என்று பலரையும் அடையாளம் கண்டுள்ளது விஜய் டிவி.மேலும் கலக்கப்போவது யாரு,சூப்பர் சிங்கர் உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழகத்தில் மூலை முடுக்கில் இருக்கும் திறமைகளையும் கண்டுபிடிக்க விஜய் டிவி தவறுவதில்லை.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல தொடர்களில் ஒன்று மௌன ராகம் , இந்த தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் க்ரித்திகா.இந்த தொடர் கொரோனாவை அடுத்து சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது.இந்த தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கும் என்று தெரிவித்திருந்தனர்.

தற்போது மௌன ராகம் தொடரில் நடித்து பிரபலமான மீண்டும் விஜய் டிவியில் புதிய சீரியல் ஒன்றில் நடிக்கிறார்.வேலம்மாள் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரின் ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளனர்.இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது,இதனை கீழே உள்ள லிங்கில் காணலாம்