“ஒரே நேரத்தில் அமெரிக்கா நான்கு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக” அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் கவலைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் “எனது நாடு, ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை” தற்போது எதிர்கொண்டு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், காலவரையறை இந்த மாபெரும் சவால்களை சமாளிக்கத் தனது குழு கடுமையாக உழைத்து வருகிறது என்றும், அவர் கூறி உள்ளார். 

குறிப்பாக, “கொரோனா தொற்று, பொருளாதார மந்த நிலை, கால நிலை மாற்றம், இன நீதி வரை” என்று, உமது நாடு இப்போது ஒரே நேரத்தில் அந்த 4 விதமான வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொள்கிறது” என்று, கவலைத் தெரிவித்து உள்ளார். 

முக்கியமாக, “வரும் ஜனவரி மாதத்தில் வீணடிக்க எங்களுக்கு நேரமில்லை என்றும், அதனால் தான் நானும் எனது அணியும் இப்போதே தயாராகி வருகிறோம்” என்றும், நாட்டு மக்களிடம் நம்பிக்கை ஊட்டும் வகையி, ஜோ பைடன் தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார்.

ஜோ பைடன் - டொனால்ட் டிரம்ப் “பொறுப்பைக் கைவிடுவதாக” குற்றம் சாட்டியதோடு, தற்போது நிலுவையில் உள்ள கொரோனா வைரஸ் நிவாரண 
மசோதாவில் உடனடியாக கையெழுத்திட டிரம்பிற்கு அழுத்தம் கொடுத்து வந்தார். 

ஜோ பைடனின் டிவீட்டிற்கு அடுத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, தற்போது அதிபராக உள்ள டிரம்ப், “கொரோனா வைரஸ் நிவாரணம் மற்றும் அரசாங்க 
செலவு மசோதாவில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டார்” என்பது குறிப்பிட்டார். 

அதிபர் டிரம்ப், கொரோனா வைரஸ் நிவாரணம் மற்றும் அரசாங்க செலவு மசோதாவில் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்ட இந்த நிகழ்வும், ஜோ பைடனின் அமெரிக்காவின் 4 நெருக்கடிகள் பற்றிய டிவிட்டும் அந்நாட்டில் வைரலாகி வருகிறது. இது, அங்கு பேசும் பொருளாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே போல், “அடுத்த சில வாரங்களில் நிலைமை உண்மையில் மோசமடையக்கூடும்” என்று, அமெரிக்காவின் உயர்மட்ட விஞ்ஞானி அந்தோனி பவுசி தெரிவித்துள்ளார்.

இந்த உலகம் முழுமைக்கும் 2 ஆம் கட்ட கொரோனா அலை மீண்டும் வீசி வருகிறது. முக்கியமாக அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா வைரஸ் தன்னுடைய கோர முகத்தை தீவிரமாக காட்டி வருகிறது. இந்த சூழலில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் 8 ஐரோப்பிய நாடுகளில் பரவி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 1,95,73,847 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்நாட்டில் இதுவரை 3,41,138 பேர் வரை உயிரிழந்து இருக்கிறார்கள். 

மேலும், இங்கிலாந்தில் இருந்து மக்களை அமெரிக்காவிற்குள் அனுமதிப்பதற்கு முன்பு எதிர்மறையான கொரோனா சோதனைகள் தேவை என்ற அமெரிக்க அதிகாரிகளின் முடிவுக்கு டாக்டர் அந்தோனி பவுசி ஒப்புதல் வழங்கி இருக்கிறர். 

இது தொடர்பாக அமெரிக்காவின் உயர்மட்ட விஞ்ஞானி அந்தோனி பவுசி கூறும்போது, “கொரோனா தொற்றின் மிக மோசமான நிலை இன்னும் வரவில்லை என்றும், கொரோனா வைரஸின் மாறுபாட்டை அமெரிக்கா கவனித்து வருகிறது” என்றும், குறிப்பிட்டார். 

“கொரோனா வைரஸை பரப்புவதால் நாடு இன்னும் ஒரு முக்கியமான கட்டத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளது என்றும், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் கவலையை நானும் பகிர்ந்து கொள்கிறேன் என்றும், அடுத்த சில வாரங்களில் நிலைமை உண்மையில் இன்னும் மோசமடையக்கூடும்” என்றும், அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, சந்திரனின் மேற்பரப்பில் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் இடமாக மாற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக சீன நிபுணர்கள் பகிரங்கமாகு குற்றம்சாட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.