விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.ஒளிபரப்பானது முதல் பெரிய வரவேற்பை இந்த தொடர் பெற்றிருந்ததது.ஸ்டாலின்,சுஜிதா,குமரன்,வெங்கட்,ஹேமா,சித்ரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.விறுவிறுப்பாக சென்று வரும் இந்த தொடர் நல்ல TRP-யையும் பெற்று வருகிறது.

விறுவிறுப்பாக சென்று வந்த இந்த தொடர் வெகுவிரைவில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு அங்கும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.பிரபாகர்,சுஜிதா,பிரியங்கா நாய்டு,மஹேஸ்வரி,கணேஷ் ரெட்டி,ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முன்னணி வேடத்தில் நடித்து வருகின்றனர்.

தெலுங்கிலும் 500 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக சென்று வருகிறது இந்த தொடர்.தற்போது இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் பிரியங்கா நாய்டுவிற்கு திருமணம் நடைபெற்றுள்ளது.இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி செம வைரலாகி வருகின்றன.இவருக்கு பிரபலங்களும்,ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவர் தெலுங்கில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தமிழில் வரும் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மிகவும் பிரபலமாக இருந்த கதாபாத்திரங்களில் ஒன்று மறைந்த நடிகை சித்ரா நடித்து வந்த முல்லை என்ற கதாபாத்திரம் தான்.தற்போது இந்த கதாபாத்திரத்தில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வரும் காவியா அறிவுமணி நடித்து வருகிறார்.

A post shared by Devotee Of Priyanka Naidu (@devoteeofpriyankanaidu)