நடிப்புலகின் அசுரனாக திகழ்பவர் நடிகர் தனுஷ். ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே இந்திப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் தனுஷ். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்திலும் நடிக்கவுள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்துவருகிறார் தனுஷ். D43 என அறிவிக்கப்பட்ட இந்த படத்தில் டைட்டில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முதற் கட்ட படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் துவங்கியது. 

க்ரைம் திரில்லரான இந்த படத்தில் தனுஷ் பத்திரிகையாளர் ரோலில் நடிக்கவுள்ளார் என பேசப்படுகிறது. படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். படத்தின் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனத்துக்கான பொறுப்பைப் பாடலாசிரியர் விவேக் ஏற்றுள்ளார். 

இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். இந்தப் படத்துக்காக 3 பாடல்களின் பணிகளை லாக்டவுன் சமயத்திலேயே ஜி.வி.பிரகாஷ் முடித்துக் கொடுத்துவிட்டார். சமீபத்தில் தனுஷ் பாடிய பாடலுடன் படப்பிடிப்பை துவங்கினர் படக்குழுவினர்.  கடந்த வாரம் இந்த படத்தின் முதல் பாடலை படமாக்கி முடித்துவிட்டனர். 

தற்போது ஹைதராபாத்தில் படத்தை படமாக்கி வருகின்றனர் படக்குழுவினர். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தனுஷ் மற்றும் நாயகி மாளவிகா மோஹனன் உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கூலான லுக்கில் தனுஷ் இருப்பதை பார்த்த ரசிகர்கள், மிகவும் ஸ்டைலாக உள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.