இந்தியாவில் 50 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்கவும், அதை கட்டுப்படுத்தவும் உலக நாடுகள் முழுவதும் தடுப்பூசியைக் கண்டுபிடித்து தங்கள் நாட்டு  மக்களுக்கு முதலில் செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் சீரம் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டகோவேக்சின் மற்றும் ஆக்ஸ்போர்டு நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசிகள் இந்தியாவில்  கடந்த ஜனவரி 26 ஆம் தேதி முதல் முன்கள பணியாளர்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று மட்டும் ஒரேநாளில் நாடு முழுவதும் 5 லட்சத்து 9 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான் அதிக பட்சமாக 5 லட்சத்து 89 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 565 கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.மேலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் இதுவரை 1 லட்சத்து 57 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

- லெனின்