செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் கோப்ரா. இந்த படத்தில் KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனந்த ராஜ், ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ், மிர்னாலினி ரவி, பூவையார், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசைப்புயல் AR ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

படத்தின் டீஸர் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இந்த டீஸரை கொண்டாடினர் சியான் ரசிகர்கள். டீஸர் காட்சிகளில் பல கெட்டப்புகளில் வருகிறார் சியான் விக்ரம். கணித வாத்தியராக இருந்து கொண்டு அவர் செய்யும் குற்றங்களை கண்டு பிடிக்கும் இன்டர்போல் அதிகாரியாக இருக்கிறார் இர்ஃபான் பதான். ஒளிப்பதிவு, பின்னணி இசை என பட்டையை கிளப்புகிறது கோப்ரா டீஸர். அஸ்லான் இல்மாஸ் எனும் இன்டர்போல் அதிகாரியாக நடித்துள்ளார் பதான். இவருக்கு இதுதான் முதல் படம். 

கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த இதன் படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்பட்டு நடைபெற்று வந்தது. இந்நிலையில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கும் காட்சிகளை படமாக்கி முடித்துவிட்டனர் படக்குழுவினர். இதுகுறித்து நடிகை ஸ்ரீநிதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவு செய்துள்ளார். தனது முதல் தமிழ் படம் நல்லபடியாக முடிந்துவிட்டது என்றும் கூறியுள்ளார். ஸ்ரீநிதி நடிப்பில் கே.ஜி.எஃப் படமும் வெளியாகவுள்ளது. 

இசைப்புயல் AR ரஹ்மானின் முதல் பாடலான தும்பி துள்ளல் பாடல் வெளியாகி பிலே லிஸ்ட்டை ரூல் செய்தது. மீதம் உள்ள பாடல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  படத்தின் டப்பிங் பணிகளும் ஒருபுறம் நடந்து வந்தது. 

இந்த படத்தை முடித்து விட்டு, மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் சியான் விக்ரம் இணையவுள்ளதாக தகவல் தெரியவந்தது. அதன் பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் சியான் 60 படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துருவ் விக்ரமும் அந்த படத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கவுள்ளார். சியான் 60 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியானது குறிப்பிடத்தக்கது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Srinidhi Shetty 🌸 (@srinidhi_shetty)