விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன் 12,110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்கங்களின் பிரதிநிதி ,’’ பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டதற்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க முதலமைச்சரை சந்தித்தோம். இந்தியாவிலேயே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் விவசாயிகளுக்கு அதிகளவு செய்துள்ளார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நிதி நெருக்கடியிலும்,  12, 110 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி செய்துள்ளது பாராட்டுகுரியது அதற்காக முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தோம்.” என்றனர்.