சமீபத்தில் பிக்பாஸ் புகழ் ஜூலி வெளியிட்ட வீடியோ பெரிதளவில் வைரலானது. அதில் ஒரு நபர் உடன் மிக நெருக்கமாக அமர்ந்து இருப்பது போலவும், முத்தம் கொடுப்பது போல சென்று, அங்கு தும்மல் மட்டுமே வருவது போல வீடியோவில் காட்டப்பட்டு இருந்தது. இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள், அந்த வீடியோவில் இருப்பது யார் ? உங்களுக்கு மிகவும் வேண்டியவரா ? உங்கள் பாய் பிரென்டா என கேள்வி கேட்க ஆரம்பித்தனர். என் தம்பி என்று ரசிகர்களுக்கு பதிலளித்தார் ஜூலி. 

தற்போது செல்லப்பிராணியுடன் கொஞ்சி விளையாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவும் இணையத்தை புரட்டி போட்டு வருகிறது. குறிப்பாக பெட் லவ்வர்ஸ் இதை ஷேர் செய்து வருகின்றனர். 

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு வீர தமிழச்சியாக திகழ்ந்தவர் ஜூலி. அந்த புகழ் அவரை இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது. செவிலியரான ஜூலிக்கு பின் பிக்பாஸ் முதல் சீசனில் நுழையும் வாய்ப்பும் கிடைத்தது. பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று அதிக அளவு வெறுப்பை சம்பாதித்தார். 

அவர் பிக் பாஸில் இருந்து வெளியில் வந்து பல வருடங்கள் ஆனாலும் அவர் சமூக வலைதளங்களில் எது பதிவிட்டாலும் தொடர்ந்து அவரை தொடர்ந்து தாக்கி பதிவிடும் கூட்டம் மட்டும் அப்படியே தான் இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி ஜூலி கவலைப்படாமல் மாடலாகவும், நடிகையாகவும் தன்னை செதுக்கிக்கொண்டு வருகிறார். 

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் திரைப்படங்கள் பக்கமும் தலைகாட்டினார் ஜூலி. நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் பயோபிக் படம், அம்மன் தாயி படம் மற்றும் ஹிப் ஹாப் ஆதியின் நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். ஜூலி பல திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் சமீப காலமாக அதிக அளவு போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அந்த போட்டோக்கள் வைரல் ஆகவும் செய்கின்றன. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Julee (@mariajuliana_official)