கள்ளக் காதலன் உடன் உல்லாசமாக இருக்கும் போது கணவன் வந்து கதவைத் தட்டி உள்ளே வந்து நேரில் பார்த்து விட்டதால், அவமானம் தாங்காமல் அவர் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு உள்ளார். 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த உள்ளியக்கோட்டையை சேர்ந்த வேல்முருகன் என்பவருக்குத் திருமணமாகி, நாகலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 

அதே நேரத்தில், கணவன் வேல்முருகன், கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். 

இந்த நிலையில் தான், வீட்டில் குழந்தைகளுடன் இருந்த வேல்முருகனின் மனைவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக் காதலாக மாறி உள்ளது. 

இதன் காரணமாக, கள்ளக் காதலர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து தொடர்ச்சியாக உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இப்படியாக, இவர்களது உல்லாச வாழ்க்கை தொடர்ந்துகொண்டே சென்றதாகக் கூறப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன் வேல் முருகன், தாமதமாக நள்ளிரவு நேரத்தில் வீடு திரும்பி உள்ளார். 

அப்போது, வீட்டின் கதவை அவர் தட்டி உள்ளார். ஆனால், அவரது மனைவி கதவை திறக்கவே இல்லை. இப்படியாக, மிக நீண்ட நேரமாக வேல் முருகன் வீட்டின் கதவைத் தட்டி உள்ளார். ஆனாலும், அவர் மனைவி நாகலட்சுமி கதவை திறக்கவே இல்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து, நீண்ட நேரத்திற்குப் பிறகு, மிகவும் பதற்றத்துடன் அவர் கதவை வந்து திறந்து உள்ளார். அப்போது, தன் மனைவியைக் கவனித்து கணவன் வேல் முருகன், சற்று சந்தேகப்பட்டு வீட்டின் உள்ளே சென்று பார்த்து உள்ளார். அப்போது, அவருக்கு ஒன்றும் தெரியவில்லை.

இதனையடுத்து, அவர் தனது ஆடைகளை மாற்றி உள்ளார். அப்போது, அவர் வீட்டின் கட்டிலுக்கு அடியில் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் பதுங்கி இருந்து உள்ளார். இதனைப் பார்த்த வேல் முருகன் கடும் அதிர்ச்சியடைந்து, ஆத்திரப்பட்டு ரமேஷ் மற்றும் தன் மனைவி நாகலட்சுமியை தாக்கி உள்ளார். இதில், ரமேஷ் அங்கிருந்து ஓட்டம் பிடித்து உள்ளார்.

இதனையடுத்து, தன் மனைவியை திட்டி விட்டு, வீட்டிலிருந்து நேராக புறப்பட்ட கணவன் வேல் முருகன், உடனடியாக மனைவியின் கள்ளக் காதல் குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். 

ஆனால், அந்த நள்ளிரவு நேரத்தில் அவரது புகாரை பெற்றுக்கொள்ளாத போலீசார், காலையில் வந்து புகார் அளிக்குமாறு வேல் முருகனை போலீசார், திருப்பி 
அனுப்பி வைத்து உள்ளனர். 

இந்த நிலையில், இரவு வீடு திரும்ப மனம் இல்லாத அவர் இரவு முழுவதும் தூங்காமல் அங்கேயே தங்கிவிட்டு காலையில் வீடு திரும்பி உள்ளார். 

அதே நேரத்தில், தனது கணவருக்கு தன்னுடைய கள்ளக் காதல் விசயம் தெரிந்து விட்டதால், மிகவும் அவமானப்பட்டு அந்த அசிங்கத்தை தாங்கிக்கொள்ளாமல்
அவர் மனைவி நாகலட்சுமி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். 

அப்போது, காலையில் வீடு திரும்பிய கணவன், தன் மனைவி தூக்கில் தொங்கியதைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்து உள்ளார். இது தொடர்பாக, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார், அவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார். தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ரமேஷை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.