திருடப் போன இடத்தில் பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து அட்டூழியம் செய்த திருடனை போலீசார் கைது செய்த போது, நீதிபதிக்கே சவால் விடுக்கும் வகையில் பலே திருடன் பேசியது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

திருச்சி காந்தி மார்க்கெட்டை அடுத்த கீரைக்கடை பஜார் பகுதியில் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவரின் வீடு இருக்கிறது.

அந்த வீட்டில் ஆட்கள் யாரும் இல்லை என்று நினைத்து, அந்த வீட்டில் கொள்ளையடிக்கச் சென்ற நபர் ஒருவர், அந்த வீட்டில் ஒரு பெண் மட்டும் இருந்ததைப் பார்தது முதலில் திடுக்கிட்டு உள்ளார்.

அதன் பிறகு, அந்த பெண் வீட்டில் தனியாக இருப்பதைப் பார்த்து, சற்று யோசித்த அந்த பெண், கத்தி முனையில் அந்த பெண்ணை பயங்கரமாக மிரட்டி, தனது  செல்போனில் அந்த பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்தபடி, அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று உள்ளார். 

இதனால், பதறிப்போன அந்த பெண் சத்தம் போட்டு, உதவிக்கு வருமாறு கத்தியுள்ளார். பெண்ணின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து உள்ளனர். அப்போது, அந்த நபர் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றது தெரிந்து கடும் அதிர்ச்சியடைந்து, சத்தம் போட்டு அவனை பிடிக்க முற்பட்டனர். 

இதனையடுத்து, அந்த திருடன், அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். அதே நேரத்தில், அந்த பகுதியில் உள்ள காவல் துறையினருக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக உடனடியாக விரைந்து வந்த போலீசார். தப்படி ஓட முயன்ற திருடனை விரட்டிப்பிடித்து அதிரடியாக கைது செய்தனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட திருடனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது, அந்த திருடன், நீதிபதியை தரக்குறைவாகப் பேசி, நீதிபதிக்கே சவால் விடும் வகையில் பேசி உள்ளான் என்று கூறப்படுகிறது.

அதாவது, “நீங்க என்ன கேஸ் பாக்குறீங்க? ஏழைன்னா ஒரு நியாயம்..? பணக்காரன்னா ஒரு நியாயமா? நான் செஞ்சது தப்பு தான். நீங்க என்ன பண்ணனுமோ பண்ணுங்க. அனுப்பிவிடுங்கனு ஜட்ஜ்கிட்ட நான் சொல்லுவேன்” என்று, திமிராக பேசி உள்ளார். இவற்றுடன், அந்த திருடமன் நீதிபதியை சற்று தரக்குறைவான 
வார்த்தைகளையும் பயன்படுத்தித் திட்டியதாகத் தெரிகிறது. 

இதனால், அதிர்ச்சியடைந்த போலிசார், கைது செய்யப்பட்ட திருடனை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த திருடன் பெயர் டேவிட் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து, அவனிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்று, நீதிமன்றத்தில் முன்னிறுத்துவதற்கான பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, திருடப் போன இடத்தில் பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து அட்டூழியம் செய்த திருடனை போலீசார் விரட்டிச் சென்று கைது செய்த போது, நீதிபதிக்கே சவால் விடுக்கும் வகையில் பலே திருடன் பேசியது தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.