உத்திரகண்ட் மாநிலத்தின் சமோலியில் பனிப்பாறைகள் சரிந்து ஏற்பட்டு வெள்ளத்தால் 150 பேர் இறந்துள்ளனர்.


 உத்திரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் தீடிரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தொளிகங்கா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பனிப்பாறைகள் சரிந்து ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 150 நபர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது என உத்திரகண்ட மாநில தலைமை செயலாளர் ஓம் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.  


மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. நந்திதேவி பனிக்குன்று உடைந்து இருப்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் வெள்ள மீட்பு பணியில் மாநில அரசுக்கு உதவுவதாக அமித்ஷா தெரிவித்ததையடுத்து டெல்லியின் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உத்திரகாண்ட விரைந்துள்ளனர்.