புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும்  விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக சர்வதேச பிரபலங்களான பாடகி ரிஹானா, கிரேட்டா தன்பெர்க், மியா காலிஃபா உள்ளிட்டோர் ட்விட்டரில் தனது கருத்து தெரிவித்தனர்.


அப்போது விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த வெளிநாட்டு பிரபலங்களைக் கண்டித்து ட்விட்டரில் தனது கருத்ததை பதிவிட்டார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ‘’வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் பார்வையாளர்களாகத்தான் இருக்க வேண்டுமே தவிர மற்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முடியாது’’ என்று பதிவிட்டு இருந்தார். 


பொதுவாக நாட்டின் எந்த முக்கிய விவகாரங்களுக்கும் கருத்து தெரிவிக்காத சச்சின் டெண்டுல்கர், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த பிரபலங்களை சாடி இருந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  இதன்பின்பு, சச்சினுக்கு அதிருப்தியும் ஆதரவும் பரவலாக எழுந்தது. 


இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ,’’ சச்சின் டெண்டுல்கர் ஏதோவொன்றை எதிர்பார்த்து தான் அரசுக்கு ஆதரவாக ட்வீட் செய்கிறார். அவர் தனது மகன் அர்ஜுனை ஐ.பி.எல்.கிரிக்கெட்டில் தேர்வு செய்ய விரும்பினார். என்னை பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர் பாரத ரத்னாவுக்கு தகுதியானவர் அல்ல.  அவர் இந்த விருதுக்கு தகுதியானவரா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ” என்றுள்ளார்.