புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள விஸ்வநாதபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் என்றவர் தனது 101-வது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார். 


மூன்று மகன்கள்,  இரண்டு மகள்கள் மற்றும் 15 பேத்திகள் 16 பேரன்கள் 32 கொள்ளுப் பேரன் பேத்திகளுடன் மற்றும் தனது மனைவி லட்சுமியுடன் இணைந்து தனது பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். 


இந்த பிறந்தநாள் விழாவில் 150 பேருடன் சேர்ந்து தனது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார். நிகழ்ச்சிக்கு வந்த அத்தனை பேரும் தாத்தாவுடன் செல்பி எடுத்துக்கொண்டுள்ளனர்.


கொரோனா ஊரடங்கு காரணமாக 100வது பிறந்தநாளை பெரிதாக கொண்டாட முடியாமல் சென்றுவிட்டது. அதனால் 101 வது பிறந்தநாளை அனைத்து நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து கொண்டாடுகிறோம். அடுத்த பிறந்த நாளை இதை விட பெரிதாக கொண்டாடுவோம் என்கிறார்கள் குடும்பத்தினர்.

”தோட்டத்தில் விளையும் காய்கறிகளை தான் சாப்பிடுவேன். நேர்மையான எண்ணமும் மற்றவர்களுக்கு கெடுதல் செய்யாமலும் இருந்தாலே போதும் நீண்ட ஆயுளோடு வாழலாம்’’  என்கிறார் விஸ்வநாதன்.