பிக்பாஸ் வீட்டில் பாலாஜி முருகதாஸ் இந்த வாரம் நடந்த டாஸ்குகளில் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடி வருகிறார். நேற்று பாட்டு பாடும் டாஸ்கில் வேறு யாரையும் அவர் Buzzer அழுத்த விடவே இல்லை. அனைவரையும் இடித்து தள்ளி விட்டு வேகமாக சென்று buzzerஐ பல முறை அழுத்தினார் அவர். அதனால் தான் அவரை லாரி என்று ரம்யா விமர்சித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பலமுறை அழுத்தியதாலேயே நெகட்டிவ் மதிப்பெண்கள் பெற்று பாலாஜி கடைசி இடம் மட்டுமே பிடித்தார். அதனால் மிகவும் வருத்தத்துடன் அவர் பேசியதையும் நாம் பார்த்தோம். இந்நிலையில் பாலாஜி இன்று நடந்த டாஸ்க்கிலும் தொடர்ந்து அதிக கவனத்துடன் விளையாடி வருகிறார். அது பற்றி ரியோ மற்றும் சோம் இருவரும் பேசி இருப்பது சற்று முன்பு வெளிவந்திருக்கும் இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் கட்டப்பட்டிருக்கிறது.

வீட்டிலிருந்து அனைவரும் வந்து சென்ற போது பழைய பாலாவை காணோம் என சொல்லி சொல்லி அவன் ஒரு மாதிரி ஆகிவிட்டான். சண்டை போட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா அவன். இது போல அவன் ஆடுவதற்கு காரணம் அவன் தன்னை காப்பாற்றிக் கொள்ளத்தான். ஏனென்றால் அவனுக்கு பயம். சண்டை உள்ளிட்ட விஷயங்களைத் தவிர்த்து அவன் கேமை சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறான் என சோம் தெரிவித்திருக்கிறார். 

அதற்கு பதில் கூறிய ரியோ பாதிக்கு பிறகு தான் பாலா சரியாக விளையாடுவது போல தெரிகிறது என கருத்து கூறுகிறார். அதனை தொடர்ந்து பேசிய சோம், அவன் மீது மட்டுமே தப்பு இல்லை. கொஞ்சம் அதிகமாக சிலரிடம் இருக்கிறது. அது யார் என நான் சொல்ல விரும்பவில்லை என ஆரியை பற்றி அவர் மறைமுகமாக தாக்கிப் பேசி இருக்கிறார்.

இந்நிலையில் இன்று வெளியான மூன்றாம் ப்ரோமோவில், ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஒருவரின் குறை நிறைகளை கூறி வருகின்றனர். அப்படியிருக்க ஆரி குறித்து சோம் மற்றும் ரியா பேசினார்கள். ஆரி மற்றவர்கள் பற்றி குறை கூறும் விஷயம் எனக்கு பிடிக்கவில்லை. நான் இல்லாத போது என்னை பற்றி பிறரிடம் குறை கூறுவானோ என்று தோன்றுகிறது. அதன் பின் பேசிய ரியோ, ஒரு விஷயத்தை சுருக்கமாக பேசிட்டு போய்ட்டாருனா, அவருக்கு நிகர் யாரும் இல்லை என்று பாராட்டினார்.