கடந்த சில நாட்களாகவே சிம்பு திரைப்படங்களின் அப்டேட்டுகள் தான் கோலிவுட் வட்டாரங்களில் அதிகமாக வெளியாகி வருகிறது. அடுத்தடுத்து தன்னுடைய படங்களின் அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தி வருகிறார் சிலம்பரசன். அந்த வகையில் 2018-ம் ஆண்டு சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் ஆரம்பமான திரைப்படம்தான் கன்னட ரீமேக் படமான மஃப்டி. இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்தது. 

அதன் பிறகு சிம்புவின் மாற்றம் தான் அனைவருக்கும் தெரியுமே. தற்போது ஈஸ்வரன் படத்தை முடித்துவிட்டு, மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகளில் பணியாற்றி வருகிறார். ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் பத்து தல என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் டைட்டிலில் போஸ்டரை தமிழ் சினிமாவைச் சேர்ந்த 10 முன்னணி இயக்குனர்கள் வெளியிட்டனர். 

பத்து தல ராவணன் என்பதற்கேற்ப இந்த படத்தில் சிம்புவுக்கு நெகட்டிவ் கலந்த அதிரடி வேடம் என்கிறார்கள். ஜனவரியில் பத்து தல படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொள்ள இருப்பதாக திரை வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. இயக்குனர் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் முதல் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் தாசில்தாராக பிரியா பவானி நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் இணையத்தில் கசிந்து வருகிறது. 

இந்நிலையில் பத்து தல படத்தில் நடிகர் டீஜே அருணாச்சலம் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது . அசுரன் படத்தில் வேல்முருகன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான டீஜே அருணாச்சலத்தின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்ததோடு இந்த அறிவிப்பு போஸ்டரையும் பத்து தல படக் குழு வெளியிட்டுள்ளது . 

மேலும் இன்று பிறந்தநாள் கொண்டாடும் தீஜே அருணாசலத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள். தனுஷுடன் ஒரு படம், சிம்புவுடன் ஒரு படம் நடிக்கும் டீஜேவுக்கு இணையத்தில் வாழ்த்துகள் பறக்கின்றன. சிறந்த இண்டிபென்டென்ட் பாடகரான டீஜே, நடிப்பிலும் அசத்தி வருவது அவரது கலைபயணத்துக்கு கச்திதம் சேர்க்கிறது.