குஷ்பு தனது கல்வி தகுதி பற்றின ஒரு ட்வீட்டை பதிவு செய்து உள்ளார். அது அரசியல் வட்டாரங்கள் மற்றும் சமூக வளைதளங்களில் கவனம் பெற்று இருக்கிறது. 


குஷ்பூ தனது ட்விட்டர் பகுதியில், ‘’ எனது கல்வி தகுதி குறித்து எதிரணியில் கேள்வி எழுந்துள்ளது. நான் மேல் தட்டு குடும்பத்தில் பிறக்கவில்லை. அதனால் குடும்பத்துக்கு உதவியாக இருக்க வேண்டி 8-ம் வகுப்பிலே பள்ளிப்படிப்பை விட வேண்டி இருந்தது. ஆம். நான் படிக்காதவள் தான். அதனால் என்ன? குறைந்தபட்சம் மற்றவர்களை படிக்க வைக்க என்னால் முடிகிறது.


புத்தகங்கள் மட்டுமே ஒருவரை படித்தவராக நிர்ணயிக்கும் என்றால் நமக்கு காமராஜர் கிடைத்து இருக்கமாட்டார். எனது தகுதிகளை நிர்ணயிக்க ஒரு துண்டு பேப்பர் தேவையில்லை. நான் குறைந்த பட்சம் , சில படித்த அறிவிலிகளுக்கு முன்னால் இருக்கிறேன். முட்டாள்களைப் போல நடந்துக் கொள்ளவில்லை. உங்களால் முடிந்தால், ஒரு பெண் குழந்தை கல்வி கற்பதற்கு உதவி செய்யுங்கள் " என்று தன் கல்வியறிவைப் பற்றி விமர்சித்தவர்களுக்கு பதில் சொல்லி இருக்கிறார்.