பிக் பாஸ் 4 போட்டியாளர்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரே குறிக்கோள், இந்த வாரம் கொடுக்கப்பட்டு இருக்கும் டிக்கெட் டு ஃபினாலேவை பெறுவது தான். அதற்காக தொடர்ந்து பல் டாஸ்குகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதில் அனைவரும் மிகத் தீவிரமாக விளையாடி வருகிறார்கள்.

தண்ணீர் நிறைந்த பலூனை ஒரு கையால் தூக்கி நிற்பது, கட்டையை தலையில் வைத்து நிற்பது மற்றும் முதுகில் ஒட்டியிருக்கும் badge-ஐ எடுப்பது மற்றும் பாடல் இசையை ஒலிக்க விட்டு பாடலை பாட சொல்வது என்பது போன்ற டாஸ்குகள் இதுவரை வழங்கப்பட்டு இருக்கின்றன. அதில் பெரும்பாலானவற்றில் ரியோ அதிக மதிப்பெண்களை பெற்று வந்தார். அதனால் தான் பாலாஜி அவரை குறிவைத்து ஒரு டாஸ்கில் அவரை முதலிலேயே அவுட் ஆக்கினார்.

போட்டியாளர்களுக்கு இன்று ஐந்தாவது டாஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. அதில் போட்டியாளர்கள் தங்கள் கையில் இருக்கும் வளையத்தில் ஒரு பந்தினை வைத்த சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும் என்றும், அந்த பந்து நின்று விட்டாலோ அல்லது கீழே விழுந்து விட்டாலோ அவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் சொல்லப்பட்டது. அதுமட்டுமின்றி மேலே கீழே என ஏறி இறங்கும் வகையில் ஒரு செட்டப்பும் அமைக்கப்பட்டு இருந்தது.

இதை அனைவரும் மிகத் தீவிரமாக விளையாடிக்கொண்டிருந்த போது முதல் ஆளாக ஆரி தான் பந்தைக் கீழே விட்டிருக்கிறார். அதை தொடர்ந்து கேபி, ரம்யா, ஷிவானி ஆகியோரும் தவற விட்டிருக்கிறார்கள். இறுதி மூவராக ரியோ, சோம் மற்றும் பாலாஜி மட்டுமே இருந்தனர். அந்த நேரத்தில் சோம் பந்தை சுற்றாமல் அது நிற்கும் வரை பார்த்துக் கொண்டிருந்ததால் அவர் எலிமினேட் செய்யப்பட்டார். தொடர்ந்து பாலாஜி மற்றும் ரியோ ஆகியோர் இடையே மட்டுமே போட்டி இருந்தது. அதில் இறுதியில் ரியோ தான் ஜெயித்தார்.

ஏற்கனவே ரியோ அதிக புள்ளிகள் பெற்று இருக்கிறார் என பாலாஜி அவர் மீது வைத்த நிலையில் இந்த டாஸ்க்கிலும் அவர் முதலிடம் பிடித்திருக்கிறார். அதனால் டிக்கெட் டு finale அவருக்குத்தானா? என்ற கேள்வியில் உள்ளனர் பிக்பாஸ் ரசிகர்கள். 

இந்நிலையில் தற்போது வெளியான இரண்டாம் ப்ரோமோவில், பாலாஜியின் கேம் குறித்து ரியோ மற்றும் சோம் ஆலோசிக்கின்றனர். கார்டன் ஏரியாவில் இருவரும் சேர்ந்து பேசுகையில், பழைய பாலா காணோம் என்று சொல்லி சொல்லியே அவன் ஒருமாறி ஆயிட்டான் பாவம் என்றனர். கேம் என்று வரும் போது பாலா சிறப்பாக விளையாடுவதாகவும் அவர்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர்.