பிக் பாஸ் 4 இறுதிக்கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இன்னும் சில வாரங்களே இருப்பதால் ஆட்டம் அதிகம் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் நடந்த சீசன்களை போல இல்லாமல் இந்த வருடம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டுக்கு வருவது சந்தேகம் தான் என கூறப்பட்டது. ஆனால் தற்போது அனைவருக்கும் சர்ப்ரைஸ் அளிக்கும் விதத்தில் ஷிவானியின் அம்மா பிக் பாஸ் வீட்டுக்குள் வந்திருந்தார். 

ஷிவானி பாத்ரூம் பகுதியில் இருந்த போது அவரை freeze என பிக் பாஸ் கூறினார். அப்போது அவரது அம்மா கதவு வழியாக உள்ளே அனுப்பப்படுகிறார். அதை பார்த்து ஷிவானி கண்கலங்கி ஓடிச்சென்று அவரை கட்டிப்பிடித்து அழுகிறார். அதன் பின் ஷிவானியை திட்ட தொடங்குகிறார் அவரது அம்மா. எதுக்கு இந்த ஷோவுக்கு நீ வந்தே? நீ என்ன இந்த வீட்டுக்குள்ள பண்ணிட்டு இருந்தா வெளியே யாருக்கும் தெரியாதுனு நெனைச்சிட்டு இருக்கியா என கேட்டு தாக்கி பேசி இருக்கிறார்.

ஷிவானி பாலாஜி உடன் நெருக்கம் காட்டி வரும் நிலையில் அதை பற்றி அவரது அம்மா இப்படி கோபத்துடன் பேசியது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது இன்றைய இரண்டாவது ப்ரொமோ வீடியோ வெளிவந்திருக்கிறது. அதில் பாலாஜி ஷிவானியின் அம்மா பேசியதை நினைத்து கலக்கத்துடன் இருக்கிறார். ஷிவானியின் அம்மா பாலாஜியிடம் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை என்பது தான் அதற்கு காரணம்.

நான் சம்பந்தப்பட்டு இருக்கிறேன். இது என்னால் தான் என்னும்போது எனக்கு guilty ஆக இருக்கிறது. அவர்கள் வந்து எதுவுமே திட்டிவிட்டு கேட்காமல் போனது எனக்கு குற்றஉணர்ச்சியாக இருக்கிறது  என தெரிவித்து உள்ளார் பாலாஜி.

பிக் பாஸ் வீட்டில் பாலாஜி மற்றும் ஷிவானி இருவரும் காதலிப்பது போல மிகவும் நெருக்கமாகவே இருந்து வருகின்றனர். ஆனால் அவர்கள் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை. மற்ற போட்டியாளர்களிடம் இருந்து இது பற்றி விமர்சனம் வந்தாலும் பாலாஜி கோபத்தை மட்டுமே பதிலாக கொடுத்து வந்திருக்கிறார். அடுத்ததாக என்ன பஞ்சாயத்து இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.