இந்த வார பிக் பாஸ் நாமினேஷன் வழக்கம் போல கன்பெக்ஷன் ரூமில் நடைபெறாமல் ஓபன் நாமினேஷனாக நடைபெற்றது. அதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வந்து தங்களுக்கு பிடிக்காத இருவரை நாமினேட் செய்தனர். அஜித், ஷிவானி மற்றும் கேபி ஆகியோர் ஈடுபாடு குறைவாக இருக்கிறார்கள் என்று தான் அதிகம் நாமினேஷன் வந்தது. 

இறுதியாக நாமினேஷன் லிஸ்டை அறிவித்தார். ஷிவானி, ஆஜித், ரம்யா, சோம் மற்றும் கேபி ஆகியோர் நாமினேஷன் லிஸ்டில் இருப்பதாக பிக் பாஸ் கூறினார். வெளியே போகப்போவது யார் என்பது இந்த வார இறுதியில் தான் தெரியவரும்.

விரைவில் புத்தாண்டு வர உள்ள நிலையில் போட்டியாளர்கள் என்ன resolution எடுக்க வேண்டும் என்பதை மற்ற போட்டியாளர்கள் கூற வேண்டும் என புது டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதற்காக வைக்கப்பட்டு இருக்கும் சீட்டை ஒவ்வொருவராக எடுத்து அதில் யார் பெயர் வருகிறதோ அவர்கள் அடுத்த வருடம் கொண்டு செல்ல வேண்டிய விஷயம் மற்றும் விட்டு செல்ல வேண்டிய விஷயம் ஆகியவற்றை பற்றி பேச வேண்டும் என சொல்லப்பட்டது.

அதன் படி ஒவ்வொருவராக வந்து சீட்டை எடுத்து பேசினார்கள். ரம்யா கோபப்படும்போது சிரிப்பதை நிறுத்தவேண்டும் என பாலாஜி கேட்டுக்கொண்டார். ரம்யா பேசும்போது கேபியின் கான்பிடென்ஸ் லெவல் அதிகரிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஆரி சீட்டு எடுக்கும்போது ஆஜித்தின் பெயர் வந்தது. ஆஜித் தன்னுடைய shynessஐ விட்டுவிட்டு போகவேண்டும் என்றும், உழைப்பை இன்னும் அதிகம் போட்டு கொண்டுசெல்ல வேண்டும் என்றும் கூறினார்.

ஆரியின் ஆட்டம் குறித்து நேற்று ஷிவானி மற்றும் ரம்யா ஆலோசித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில், ஷிவானியின் தாயார் பிக்பாஸ் வீட்டிற்கு என்ட்ரி தந்தார். வந்தவர் ஷிவானியை கண்டித்துள்ளார். நீ எதற்காக இந்த ஷோவுக்கு வந்த ? இங்க நீ பண்ணிட்டு இருக்கது யாருக்கும் தெரியாதுனு நினைச்சிட்டு இருக்கியா ? என்று கேட்டுள்ளார். 

கடந்த வருடம் லாஸ்லியாவின் தந்தை இதே மாதிரி தான் பிக்பாஸ் வீட்டில் நுழைந்து கண்டித்தார். இதை நினைவு கூர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.