அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முன்முனைப்போடு செய்ய தொடங்கிவிட்டன. இதனிடையே சென்னையில் அதிமுகவின் முதல் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இன்று ’வெற்றிநடைப்போடும் தமிழகம்’ என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரம் அதிமுக தொடங்கி இருக்கிறது.  இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி, 


 “தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணி அமைச்சரவையை ஏற்க இயலாது. தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி அமையும். இதுவே அதிமுகவின் நிலைப்பாடு. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை கூட்டணி ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் கூட்டணி அமைச்சரவை அமையாது என்று திட்டவட்டமாக கூறினார். பாஜக இன்னும் தேர்தல் வேட்பாளரை அறிவிக்கவில்லையே என்ற கேள்விக்கு, "இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லையே" என்று பதிலளித்தார்.


கமல்ஹாசன் நடிப்பில் வேண்டுமானால் பெரிய ஆளாக இருக்கலாம். ஆனால் அரசியலில் அவர் பூஜ்ஜியம்” என்றார்.