16 வயது சிறுமி உயிரிழந்த பின்னும் விடாமல் கூட்டுப் பலாத்காரம் செய்த கொடூரர்கள், கொடூரத்தின் உச்சக்கட்டமாக சிறுமியின் பிறப்புறுப்பில் 30 க்கும் மேற்பட்ட இடங்களை காயப்படுத்தி தடயங்களை அழிக்க முயன்ற சம்பவம் கடும் பீதியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

நினைத்துக்கூட பார்க்க முடியாத இந்த உச்சக்கட்ட கொடூரம், ராஜஸ்தான் மாநிலத்தில் தான் அரங்கேறி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், தனது இரு தோழிகளுடன் 16 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள காட்டுப் பகுதிக்கு ஆடு மேய்க்கச் சென்றிருக்கிறார்.

அப்போது, தோழிகளுடன் சேர்ந்து அந்த சிறுமி ஆடு மேய்த்துக்கொண்டிருந்த நிலையில், அந்த 16 வயது சிறுமி சிறுநீர் கழிப்பதற்காக, அங்குள்ள ஒரு மறைவான இடத்திற்கு சென்று உள்ளார்.

அப்போது, அந்த சிறுமி திடீரென்று மாயமாகி உள்ளார். இது குறித்து, அந்த சிறுமியுடன் சேர்ந்து ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மற்ற சிறுமிகள் உடனடியாக ஓடிச் சென்று, அந்த சிறுமியின் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, மாயமான சிறுமியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் ஓடி வந்து அந்த சிறுமியை தேடிய போது, அந்த சிறுமி ரத்தம் சிந்திய நிலையில் அங்குள்ள ஒரு மறைவா இடத்தில் சடலமாக மீட்கப்பட்டார். 

அத்துடன், அந்த சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு செய்யப்பட்டு கொல்லப்பட்டதும் தெரிய வந்தது.

இதனால், கடும் அதிர்ச்சயிடைந்த அந்த மலைவாழ் சிறுமியின் பெற்றோர், கதறி அழுத நிலையில், இது குறித்து அங்குள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய அந்த பகுதியைச் சேர்ந்த 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

அதே நேரத்தில், சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையும் போலீசாருக்கு கிடைத்தது. அதில், பல்வேறு அதிர்ச்சித்கரமான தகவல்கள் இடம் பெற்றிருந்தன. 

சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அங்குள்ள பண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெய் யாதவ், “எனது வாழ்நாளில் நான் இப்படி ஒரு கொடூரமான சம்பவத்தை என் வாழ்நாளிலேயே பார்த்ததே இல்லை” என்று, தெரிவித்தார்.

மேலும், “கைது செய்யப்பட்ட 3 பேரும், அந்த சிறுமியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர் என்றும், அந்த சிறுமியை அவரின் துப்பாட்டாவை வைத்தே, கட்டி வைத்து இந்த கொடூரத்தை எல்லாம் அவர்கள் அரங்கேற்றி இருக்கிறார்கள்” என்றும், கூறினார். 

குறிப்பாக, “அந்த சிறுமி, கட்டப்பட்ட நிலையிலும், அந்த 3 பேரும் பலாத்காரம் செய்யும் போதும், அதனை எதிர்த்து மிக கடுமையாக போராடி இருக்கிறார் என்றும், ஆனாலும் அந்த 3 பேரும் சிறுமியை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள்” என்றும், குறிப்பிட்டு உள்ளார்.

அததுடன், “சிறுமியின் உடல் முழுதும் காயங்கள் உள்ளன என்றும், அந்த 16 வயது சிறுமி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யும் போதே இறந்து விட்டார் என்றும், ஆனாலும் அந்த 3 பேரும் அந்த சிறுமி இறந்த பிறகும் கூட அந்த சிறுமியை மீண்டும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர்” என்றும், அதிர்ச்சிக்கரமான தகவலை வெளியிட்டு உள்ளார்.

முக்கியமாக, “சிறுமியை பலாத்காரம் செய்த முடித்தப் பிறகு, சிறுமியின் பிறப்புறுப்பில் கிட்டதட்ட 30 க்கும் மேற்பட்ட காயங்கள் இருப்பதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதையும்” அந்த போலீஸ் அதிகாரி வேதனையோடு தெரிவித்து உள்ளார்.

இப்படி, “கொடூரத்தின் உச்சமாக அரங்கேறி இருக்கும் இந்த மிக மோசமான சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக யாரும் ஆஜராகப்போவதில்லை” என்று, பண்டி மாவட்ட வழக்கறிஞர் சங்கம் தற்போது முடிவு செய்து உள்ளதாக அந்த மாவட்ட போலீஸ் உயர் அதிகாரி கூறினார்.

இந்த சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.