“3 வது திருமணம் செய்து கொள்ளப்போவதாக மிரட்டிய கணவரின் பிறப்புறுப்பை வெட்டி, 2 வது மனைவி கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரதேசம் முசாபர்நகர் ஷிகார்பூர் கிராமத்தை சேர்ந்த 57 வயதான மவுலவி வகீல் அகமது தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். 

மவுலவி வகீல் அகமதுக்கு 57 வயது ஆனாலும், இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இதில், இவருடைய 2 வது மனைவியின் பெயர் ஹாஜ்ரா.

இப்படியான சூழலில், மவுலவி வகீல் அகமதுக்கு, அவரது குடும்ப வாழ்க்கை தற்போது திருப்தி இல்லாமல், சண்டை உடன் சென்றுகொண்டிருந்து உள்ளது. இதனால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்து உள்ளது.

இந்த சூழலில் தான், ஒரு கட்டத்திற்கு மேல் மனைவியுடன் சண்டை போட முடியாமல் தவித்த 57 வயதான மவுலவி வகீல் அகமது, கடந்த சில நாட்களாக “3 வது திருமணம் செய்து கொள்ளப்போவதாக” தனது மனைவியிடம் கூறி அவர் சண்டை போட்டு வந்திருக்கிறார். 

இதற்கு, அவரின் 2 வது மனைவி ஹாஜ்ரா, கடும் எதிர்ப்பு தெரிவித்து, இது தொடர்பாகவும் சண்டை போட்டு வந்திருக்கிறார். இதன் காரணமாக, அவர்கள்  இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்து உள்ளது.

இந்த நிலையில் தான், நேற்றைய தினம் இரவு கணவன் மவுலவி வகீல் அகமது தூங்கும் போது, நள்ளிரவு நேரத்தில், மிகவும் கூர்மையான ஆயுதத்தால், வகீல் அகமதுவின் பிறப்புறுப்பை, அவரது 2 வது மனைவி அறுத்துத் துண்டித்து உள்ளார். 

இதில், அவருக்கு ரத்தம் அதிகமாக வெளியேறிய நிலையில், வலியால் கத்தி உள்ளார். அத்துடன், ரத்த வெள்ளத்தில் அவர் பரிதாபமாக அதே இடத்தில் சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, தனது உறவினர்களைத் திரட்டிய அவரது 2 வது மனைவி ஹாஜ்ரா, தனது உறவினர்களின் உதவியுடன் உடனடியாக தனது கணவனுக்கு இறுதிச் சடங்குகளை நடத்தத் தொடங்கினார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஹாஜ்ராவிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது, ஹாஜ்ரா தனது குற்றத்தை அவராகவே ஒப்புக்கொண்டார். 

இதனையடுத்து, கணவனைக் கொலை செய்த குற்றத்திற்காக, ஹாஜ்ராவை போலீசார் கைது செய்து, அழைத்துச் சென்றனர். இச்சபம்வம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.