தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகராக திகழ்கிறார் தளபதி விஜய். தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் தளபதி விஜய்க்கு தென்னிந்திய அளவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் வெளியீடாக இந்த வருடம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. 

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தளபதி விஜய்க்கு வில்லனாக பவானி என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார். ஊரடங்கு காரணமாக நட்டத்தில் இயங்கி வந்த திரையரங்குகள் அனைத்தும் புத்துணர்ச்சி பெற்றது மாஸ்டர் வெளியீட்டிற்கு பிறகுதான் என சொல்லலாம். இந்நிலையில் தளபதி விஜய்யின் அடுத்த திரைப்படமாக தளபதி 65 திரைப்படத்தைப் பற்றி அடுத்தடுத்த தகவல்கள் வெளிவந்தன. 

கோலமாவு கோகிலா, டாக்டர் திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் தளபதி 65 திரைப்படத்தை இயக்குவதாக அபூர்வ அறிவிப்புகள் வெளியான நிலையில் சமீபத்தில் தளபதி 65 பஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது. சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிக்கும் தளபதி 65 திரைப்படத்திற்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளது. 

பீஸ்ட் திரைப்படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து பிரபல தென்னிந்திய நடிகை பூஜா ஹெக்டே முதல்முறையாக கதாநாயகியாக நடிக்க உள்ளார். பிரபல இசையமைப்பாளர் அனிருத் பீஸ்ட் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான பீஸ்ட் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அனைத்தும் சமூக வலைதளங்களை அதிரவைத்த நிலையில் தற்போது பீஸ்ட் படத்தின்  கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

பீஸ்ட் படத்தின் பாடல் காட்சிக்காக பணிகள் தற்போது மும்மரமாக நடைபெறுகிறது. கதாநாயகி பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தின் பாடல்களுக்கான நடன பயிற்ச்சியில் ஈடுபடும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடன பயிற்ச்சியில் ஈடுபடும் புகைப்படத்தை வெளியிட்டு பீஸ்ட் திரைப்படத்தின் பாடலுக்கான ஒத்திகை நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளார். நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

thalapathy vijay beast heroine pooja hegde dance rehearsals for beast song shoot